கனடிய மத்திய அரசின் வீடமைப்பு நிதியாக 69 மில்லியன் டாலர்கள் மார்க்கம் நகரசபை மற்றும் யோர்க் பிராந்தியம் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டது.
(மார்க்கம் நகரிலிருந்து ஆர். என். லோகேந்திரலிங்கம்)
கனடாவின் மத்திய அரசாங்கத்தின் வீடமைப்பு நிதியாக சுமார் 69 மில்லியன் டாலர்கள் March 12, 2024 அன்று நடைபெற்ற அரச வைபவம் ஒன்றில் மார்க்கம் நகரசபை மற்றும் யோர்க் பிராந்திய சபை ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட அறிவிப்பை செய்வதற்காக கனடிய மத்திய அரசின் சர்வதேச வர்த்தகம் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் மார்க்கம் தோர்ன்ஹில் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினருமாகிய Honourable Mary Ng அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
அந்த அரச வைபவத்தில் மார்க்கம் நகரசபையின் மேயர் Frank Scarpitti மற்றும் அவரது மாநகரசபை அங்கத்தவர்கள் மற்றும் பிராந்திய சபை உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
அவர்களோடு மார்க்கம் யூனியன்வில் தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் Paul Chiang, அவர்களும் அமைச்சர் அவர்களோடு இணைந்து கொண்டார்.
நேற்றைய அறிவிப்பின் மூலம் கனடாவின் மத்திய அரசானது இந்த வீடமைப்பு திட்டத்தின் மூலம் 3 வருடங்களில் 1640 வீடுகளைக் கட்டி முடித்து அவற்றைப் பாவனையாளர்களுக்கு வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கே காணப்படும் படங்களில் அமைச்சர் மேயர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அத்துடன் நகர சபை அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளதைக் காணலாம்.
LJI Journalist Ganesh