கனடாவில் நீண்டகாலமாக இயங்கிவரும் வியாபாரி மூலை -நெல்லண்டை மக்கள் அமைப்பின்
ஒன்றுகூடல்- சிறப்பாக நடைபெற்றது. சில நாட்களுக்கு முன்னர் இந்த ஒன்றுகூடல் ஸ்காபுறோவில் நடைபெற்ற போது. அங்கு மேற்படி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்தினரோடு அங்கு கலந்து கொண்டு அந்தப் பொழுதை மகிழ்ச்சியோடு கழித்தார்கள்.
இசை. நடனம் மற்றும் விநோத விளையாட்டுகள் போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
அமைப்பின் தலைவர் சுந்தரலிங்கம் அவர்களது அழைப்பின் பேரில் நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர். இலங்கையில் அரச பதவிகளில் உயர் பதவி வகித்தவர்கள் பலர் அங்கு கூடியிருந்து தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்கள்.