(கோண்டாவில் கிழக்கு மற்றும் நவக்கிரி)
எங்கள் குடும்பத்தின் ஒரு பேராண்மையை இழந்து
நாம் ஓராண்டைக் கடக்கின்றோம். இத்தனை நாட்களும்
பொங்கி வரும் ஏக்கத்துடன் அமைதியாய் நினைத்திருந்தோம்
போற்றி அவர் முகத்தை அனைவருமே இதயத்தில் வைத்திருந்தோம்
இனி வரும் காலங்களும் அப்படித்தான் ஐயா!
நீங்கள் எமக்காய் வாழ்ந்தவர் எமக்காய் உழைத்தவர்
எமக்காய் ஆலயம் சென்று வழிபட்டவர்
எமக்காய் வியர்வை சிந்தி விதைகளை நாட்டியவர்
எமக்காகவே அனைத்தையும் செய்ய உடலை வருத்தியவர்
அப்படியாயின் நாம் எப்படி ஐயா தங்களை மறப்போம்?
உங்கள் புதல்வன் தன் உ யிரை தாயக மண்ணுக்காய் ஈந்தபோது
அவனுடலை புதைத்து விட்டு
துயிலும் இல்லத்திலிருந்து வாழும் இல்லம் நோக்கி
தலை நிமிர்ந்து திரும்பியவர் நீங்கள்
உங்கள் கண்களில் நாம் கண்ணீரைக் காணவில்லை
பல கனவுகளின் அதிர்வுகளை தங்கள் முகத்தில் கண்டோம்
உங்கள் பூவுலகப் பிறப்பு எமக்கு கிடைத்த வரம் ஐயா
வாழ்க்கைத் துணைவராகவும் தந்தையாகவும் இன்னும் பலவாகவும் உறவுகளைத் தாங்கி
எங்கள் அனைவரையும் தாங்கிக் கொண்டவர் தாங்கள் என்பதை ஊரறியும்
தங்கள் இழப்பு ஒரு மரணம் அல்ல எமக்கு ஐயா
அது ஒரு உதாரணமாய் எம் வாழ்க்கைக்கு உதவிநிற்கும்
என்றே நாம் இறுதி வரை நம்பி வாழ்வோம்!
எப்போதும் போலவே எம்மோடு இருங்கள்
தப்பாமல் தினமும் எம் கனவுகளில் வாருங்கள்!
இங்ஙனம்
குடும்பத்தினர்