த.வி.கூ. கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்து தெரிவிப்பு
சிங்கள தேசியம் தமிழர்களை சர்வதேசத்தின் பார்வையில் ஒரு குறுந்தேசிய இனமாக மாற்றும் திட்டத்தைக் கொண்டுள்ளது. எனவே நாம் தமிழ் தேசத்தை தமிழ்ழீழம் என அழைக்க வேண்டும் என்று – த.வி.கூ. கட்சியின் தலைவர் அருண் தம்பிமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் ” சிங்கள தேசியம் தமிழர்களை சர்வதேச சட்டத்தின் அடிப்படையில் ஒரு குறுந்தேசிய இனமாக மாற்றும் திட்டம் கொண்டது என்பதை நாம் கவனிக்க வேண்டும். அதனடிப்படையில் தமிழர்களின் பிரச்சனையை ஒரு கால் பந்தாட்டம் போல அங்கும் இங்கும் உதைத்து வருகின்றனர் எனவே தமிழ் தேசியத்தின் பற்றாளர்கள் அரசியல் தலைவர்கள் அனைவரும் தமிழ் தேசத்தை பற்றி பேசும் போது. ‘தமிழீழம்’ என்ற வார்தையை பாவியுங்கள் அப்போது தான் நாங்கள் எமது இலக்கை அடையமுடியும் என தெரிவித்தார்.
மட்டக்களப்ப்பு கோவிந்த வீதியிலுள்ள கட்சியின் புதிய தலைவராகக தெரிவு செய்யப்பட்ட அருண் தம்பிமுத்துவின் காரியலாலயத்தில் 18-03-2024 அன்று திங்கட்கிழமை ) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“நாங்கள் முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம் தமிழர்களாகிய எங்களுக்கு அரசியல் தீர்வு இதுவரை வந்தபாடில்லை பொருளாதார நிலையும் மந்தமாக இருக்கின்றது அதேபோல எமது மக்களின் வாழ்க்கையும் பல சவால்களுக்கு மத்தியில் முன்னெடுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழர்களின் குடிபரம்பல் வீழ்சியடைந்து தமிழீழத்தின் சிலபாகங்களான அம்பாறை திருகோணமலை மாவட்டங்களில் தமிழர்களின் தொகை ஒரு இலச்சத்துக்கு குறைவாக காணப்படும் நிலை இருக்கின்றது அதேபோல வன்னி மட்டக்களப்பில் கூட எமது மக்கள் தொகை குறைந்து கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் தமிழர்கள் வெவ்வேறு குழுக்களாக வௌ;வேறு கட்சிகளாக பிரிந்து கொண்டிருக்கின்ற நிலை காணப்படுகின்றது தமிழ் விடுதலைக் கூட்டணியை உருவாக்கிய 1975 அந்த காலத்திலே மாபெரும் தலைவர்களான தலைவர் செல்வநாயகம் ஜீ.ஜீ பொன்னம்பலம் வௌ;வேறாக இருந்தும் இரு துருவங்களும் ஒன்றினைந்து கட்டியதுதான் தமிழ் விடுதலைக் கூட்டணி
இந்த கட்சி வரலாற்று கடமையும் பொறுப்பு மிக்க மக்கள் அமைப்பு தமிழர்கள் ஒரு தேசம் ஒரு தேசிய இனம் சுயநிர்ணய உரிமை கொண்ட என்ற அடிப்படையில் வட்டுக்கோட்டை பிரகடனத்தை மேற்கொண்டு 1977 தேர்தலில் ஒரு கொள்கையின் அடிப்படையில் மக்கள் ஆணையை பெற்றது.
தமிழ் மக்களை ஒரு சுயாதீன மக்கள் கூட்டமாக இருந்து வந்ததை 1983 ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 6 ம் திருத்தச்சட்டம் மூலம் அந்த கொள்கை முறையை முன்வைக்க முடியாத நிலையை கொண்டு வந்தது அதன் பின்னர் உருவாகிய அனைத்து போராட்டங்களின் அடித்தளமும் அந்த உரித்தும் மக்கள் ஆணையால் தமிழ் விடுதலை கூட்டணிக்கு வழங்கப்பட்டது
அரசியல் தீர்வு விடையத்தில் 1949 ம் ஆண்டில் இருந்து பேச்சுவார்த்தைகளை நடாத்தி கூட பலனின்றி பல வழிகளை தேடியவர்கள் நாங்கள் 1972 பின்னர் நாங்கள் ஒரு தெளிவான நிலைக்கு வந்தோம்.
ஆங்கிலேயர் விட்டுச் சென்ற காலத்திலே தமிழ்களும் சிங்களவர்களும் இந்த தீவில் பூர்வீக குடிகளாக வாழ்ந்து வந்துள்ளனர் அதற்கான ஆயிரத்துக்கு மேற்பட்ட சான்றிதழ்கள் இருக்கின்றது சீன தளபதி அட்;மிரல் செங் கோ கோட்டை இராஜதாணியத்தை தாக்கி கைப்பற்றிய போது அந்த கோட்டை இராஜ்சியத்தின் அரசனின் கைது செய்தனர் அவரின் பெயர் வீரஅலகேஸ்வரன் என்ற தமிழன் இன்று கூட சீனர்கள் விட்டுச் சென்ற கல்வெட்டில் தமிழிலும் சீனமொழியிலும் இருக்கின்றது
எனவே தமிழர்கள் பூர்வீக குடிகள் என்பதில் எந்த விதமான கேள்வியும் இருக்கமுடியாது ஆங்கிலேயர் விட்டுச் சென்ற உடன் சிங்கள தேசம் இலங்கை தீவுக்கான கட்டமைப்பு வெறுமனவே சிங்கள தேசத்திற்கு அடிப்படையாக வரவேண்டும் என்பதற்காக எடுத்த அந்த முடிவில் தமிழர்களை ஒரு குறு தேசிய இனமாக அடையாளப்படுத்தினர்.
தமிழர்கள் ஒரு தேசிய இனத்திற்கான இறமையை இழக்க நேரிடும் போது ஒரு தேச வரைவை உருவாக்குவதற்கான உரித்துடையவர்கள் அதனடிப்படையில் ஈழத்தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்த பிரதேசங்களை எமது தாயகமாக பிரகடனப்படுத்தினோம் அந்த பிரகடணம் இன்றும் என்றும் மறுக்கவே மறைக்கவே முடியாது .
அந்த தாயத்திற்கு எப்படிபட்ட தீர்வு வரவேண்டும் என்ற கேள்வியை அனைத்து தலைவர்களும் பேசமுடியும். ஆனால் தேசம் தேசியம் சுர்யநிர்ணயம் என்பதை தமிழர்கள் விட்டுக் கொடுக்க முடியாதது எனவே தமிழீழம் என்ற வார்த்தையை இலங்கை 6 ம் திருத்த சட்டம் எந்த தடையும் விதிக்கவில்லை எனவே தமிழர்கள் எமது தாயகம் தமிழீழம் என பாவிக்கவேண்டும்
அரசியல் தலைவர்கள் வடக்கு கிழக்கு வடதமிழீழம் தென் தமிழீழம் என பாவிக்க வேண்டியதில்லை எனவே இதில் தமிழீழம் என பாவிப்பதில் எந்த விதமான சட்டசிக்கலும் இல்லை என்பததை அரசியல் தலைவர்கள் உணரவேண்டும்.
தமிழ் தலைமைகளுக்கு ஒருமித்த நாடு பிரிக்கமுடியாத நாடு என்று பேசவேண்டிய தேவையில்லை ஆனால் இலங்கை பிரிக்க முடியாது என்பதற்காக தமிழர்கள் தமது தேசத்தை மாநிலமாகவே அல்லது வேறு எந்தமுறையில் ஒரு சுயாட்சிமுறையில் உருவாக்கமுடியாது எனவே அதனை உணர வேண்டும் அதன் அடிப்படையில் எமது அரசியல் முன்னெடுக்க வேண்டு;ம்
அனைத்து அரசியல்கட்சிகளும் தேர்தல் காலங்களுக்காக மட்டும் இணைந்து ஆசனங்களை பாதுகாக்க வேண்டும் என்ற சிந்தனையை தாண்டி தமிழர்களின் அபிலாசைகளையும் தாண்டி தமிழர்களின் அடிப்படை உரிமைகளை நிலைப்பாடுகளை தெட்டதெளிவாக உணர்ந்து அந்த கொள்கை ரீதியாக இனையும் காலம் வரவேண்டும் தமிழ் தேசியம் பேசுபவர்கள் எல்லாம் தெட்டதெளிவாக தமிழர்கள் தேசிய இனம் தேசம் என்ற வரைபுக்குள் அரசியல் முன்னெடுக்க வேண்டும்.
இன்று இனப்பரம்பலில் வீழ்சியடைந்து கொண்டிருக்கும் இனம் இந்த இனத்திற்கு பிரிவுகள் தேவை இல்லை வெறுமனே தனிநபர்களுக்குள் உள்ள அரசியல் கொள்கை அல்லது தனிப்பட்ட கருத்து முரண்பாடுகளுக்காக தமிழினத்தின் எதிர்காலத்தை விலைக்கு விற்கமுடியாது
தமிழ் விடுதலைக் கூட்டணி கட்சி ஆரம்பித்த காலத்தின் கொள்கையின் அடிப்படையில் பயணிக்கும். தமீழீழத்திலுள்ள அனைத்து பாகங்களிலும் உட்வேகத்துடன் தனது செயற்பாட்டை முன்னெடுக்கும் அதேவேளை சீர்திருத்தங்களை கொண்டுவருவோம். எனவே எமது மண்ணின் மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்;டு அரசியலை முன்னெடுக்க ஒவ்வொருவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணையவேண்டும் என அனைவருக்கும் வேண்டுகொள் விடுக்கின்றேன்
அதேவேளை தமிழ் தேசியத்தின் பற்றாளர்களாக இருக்கின்ற அரசியல் பிரமுகர்கள் அனைவரும் எமது தேசம் தமிழீழம் என்ற வார்தையை பாவியுங்கள் அது நாடாளுமன்றத்திலா இருக்கலாம் சர்வதேச அரங்கே சர்வதேச ஊடகங்களுக்கோ வீட்டிலேயே பேசும் போது கூட அவ்வாறு அழைக்க வேண்டும். அப்போதுதான் எமது இலக்கை நாம் அடையமுடியும் என்றார்.