யாழ்ப்பாண இந்திய துணை தூதராகம் முன் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட ஆயத்தமான மீனவர்களை பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன் தூதரக வாசலில் இருந்து அப்புறப்படுத்தினர் .
19-03-2024 செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாண கடற்பரப்பினுள் அத்துமீறிய இந்திய ரோலர் மீன்பிடியாளர்களைக் கட்டுப்படுத்துமாறு யாழ்ப்பாண இந்திய துணை தூதரகம் முன் மீனவ அமைப்புக்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.
அவ் இடத்திற்கு வந்த பொலிஸார் தூதரகம் முன் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.
இதன் போது முரண்பட்ட மீனவர்கள் தமது கோரிக்கை தூதரகத்திற்கு தெரிய வேண்டும் போராட்டத்திற்கு அனுமதிக்குமாறு கோரினர்.
இந்நிலையில் ஐந்து நிமிடம் தூதரகம் முன் நில்லூங்கள் எனக் கூறிய பொலிஸ், பின்னர் மீனவர்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.