நாடாளுமன்ற தேர்தலில் 21 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் பட்டியலை அக்கட்சி தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் வெளியிட்டார்.
அதன்படி வட சென்னை- கலாநிதி வீராசாமி, தென் சென்னை- தமிழச்சி தங்கப்பாண்டியன், மத்திய சென்னை- தயாநிதி, ஸ்ரீபெரும்புதுார் – டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் (தனி) – க.செல்வம், அரக்கோணம்- ஜெகத்ரட்சகன், வேலுார்- கதிர்ஆனந்த், தர்மபுரி – ஆ.மணி திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை. ஆரணி- எம்.எஸ்.தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி – கே.மலையரசன், சேலம் – செல்வகணபதி, ஈரோடு – பிரகாஷ், நீலகிரி (தனி) – ஆ.ராசா, கோவை – கணபதி ப. ராஜ்குமார், பொள்ளாச்சி – கே.ஈஸ்வரசாமி, பெரம்பலுார் – அருண் நேரு, தஞ்சாவூர் – ச.முரசொலி, தேனி – தங்க தமிழ்செல்வன் துாத்துக்குடி – கனிமொழி தென்காசி – ராணி ஸ்ரீகுமார்.