நடராசா லோகதயாளன்.
இலங்கைக்கு கடத்தும் நோக்கில் தமிழகத்தின் ஏர்வாடிக் கடற்கரைக்கு எடுத்து வரப்பட்ட 2 ஆயிரம் கிலோ பீடி இலை தமிழக பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இலங்கைக்கு கடத்தும் நோக்கில் படகில் ஏற்றுவதறகாக புதன்கிழமை இரவு 9 மணியளவில் ஒரு லொறியில் கடற்கரைக்கு எடுத்து வந்த சமயம் பொலிசாரைக் கண்டதும் கடத்தல்காரர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதன்போது லொறியை பரிசோதனை செய்த தமிழக பொலிசார் அதில் இருந்து ஒவ்வொன்றும் 30 கிலோ எடையுடைய 70 பொதிகளை மீட்டுள்ளனர்.
இதனால் இலங்கைக்கு மேற்கொள்ளவிருந்த ஓர் கடத்தல் நடவடிக்கை முறியடிக்கப்பட்டுள்ளது என்று தமிழக பொலிசார் கூறுகின்றனர். தொடர்ச்சியாக தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதும், சில சமயங்களில் அவை பிடிபடுவதும் வழமையாகவுள்ளது.
அவ்வகையில் இலங்கையில் யார் அப்படி கடத்திவரப்படும் இலைகளைப் பெற்றுக்கொள்கிறார்கள் என்பது விசாரிக்கப்படுகிறது என்று இலங்கை பொலிசார் கூறுகின்றனர். இலங்கை இந்திய கடற்பரப்பு கடத்தலுக்கான ஒரு முக்கிய கேந்திரமாக மாறி வருவதை தாங்கள் அவதானித்துள்ளதாகவும், அதை தடுக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று பொலிசார் கூறினாலும், கடத்தல் என்னவோ தொடர்ந்து நடைபெறுகிறது.