(கனகராசா சரவணன்)
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் 2023 விழா மற்றும் கண்காட்சி 21-03-2024 வியாழக்கிழமை பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் இடம்பெற்றது
கலை கலாசார பீட மொழித்துறைத் தலைவர் கலாநிதி.ஸ்ரீகருணாகரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர்.வ.கனகசிங்கம் கௌரவ அதிதியாக கலை கலாசார பீட பதில் பீடாதிபதி ஜி.விக்ணேஸ்வரன், அதிதிகளாக மட்டக்களப்பு கல்விக் கல்லூரியின் முன்னாள் உபபீடாதிபதி மனோகரன்.
கிழக்குப் பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு பீட பீடாதிபதி பேராசிரியர்.சதானந்தன், தொழிநுட்பவியல் பீட பீடாதிபதி பேராசிரியர் மதிவேந்தன் பட்டதாரி கற்கைகள் பீட பீடாதிபதி பேராசிரியர் கென்னடி மற்றும் மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் உட்பட மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது மாணவர் மொழிபெயர்ப்பாளர் ( (The Student Translator) மற்றும் மொழ பெயர்ப்பாளரின் சொற்களஞ்சியம்( The Translator’s Glossary ) ஆகிய தலைப்புகளில் மென்பிரதி நூல்கள் வெளியீட்டு வைக்கப்பட்டதுடன், தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை பேராசிரியர் அஷ;ரப் நூல் திறனாய்வு உரையை நிகழ்தினார்.
இதேவேளை மொழிபெயர்ப்பு தொடர்பான விடயங்கள் அடங்கிய கண்காட்சியை கலை கலாசார பீட பதில் பீடாதிபதி ஆரம்பித்து வைத்ததுடன் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.