பி.வி.ஷங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கள்வன்’. இந்த திரைப்படத்தின் கதையை ரமேஷ் அய்யப்பன் மற்றும் பி.வி.ஷங்கர் எழுதியுள்ளனர். இந்த படத்தில் பாரதிராஜா, இவானா, தீனா, ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
டில்லி பாபு தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். பி.வி ஷங்கர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4-ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் முன்னோட்டம் தற்போது வெளியாகி உள்ளது.