யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் அனைத்துலக நாடக விழா 27-03-2024 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது.
அன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கத்தில் இந் நிகழ்வுகள் ஆரம்பமாகின.
அனைத்துலக நாடக விழாவில் பல்கலைக்கழக, பாடசாலை மாணவர்களின் நாடகங்கள் மற்றும் தொழில்வாண்மை நாடகக் கலைஞர்களின் நாடகங்களும் இடம்பெற்றன.
இந் நிகழ்வில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம், துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.