மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக வரும் ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் தொடங்கி, ஜூன் 1ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கிடையே, ஒரு சில மாநிலங்களில் இதைத்தேர்தல்களும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி, மராட்டிய மாநிலம் அகோலா- மேற்கு தொகுதிக்கு வரும் ஏப்ரல் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ம் தேதி நடைபெறும் என கூறப்பட்டது. இந்நிலையில், அகோலா- மேற்கு தொகுதி இடைத்தேர்தலை, தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.