லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் தலைவர் 171 படத்தில் தலைப்பு பதிவேற்றம் வெளியாகியுள்ளது.
இயக்குநர் லோகேஷ் நடிகர் விஜய்யை வைத்து இயக்கிய லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியான வெற்றிப்படமானது. தற்போது, லோகேஷ் கனகராஜ் ‘தலைவர் 171’ படத்திற்கான திரைக்கதை வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் உருவாக இருக்கும் படம் தலைவர் 171. இப்படத்தின் தலைப்பில் வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியாகும் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் படத்தில் போலீஸாக நடித்த ரஜினிகாந்த் இந்தப் படத்தில் கைதியாக இருப்பது போன்ற பதாகை வெளியாகியுள்ளது.