பிரதமர் மோடி உலக கோடீஸ்வரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் உடன் செயற்கை நுண்ணறிவு டிஜிட்டல் பிரிவை கட்டுப்படுத்துவது குறித்து உரையாடினார்.
உரையாடல் முடிவில் பிரதமர் மோடிக்கு பில் கேட்ஸ் ஊட்டசத்து தொடர்பான புத்தகங்களை பரிசாத வழங்கினார். அதற்குப் பதிலாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை மோடி பரிசாக வழங்கினார்.
அதில் ஒன்று தூத்துக்குடி முத்து ஆகும். தூத்துக்குடி முத்தை பில் கேட்ஸ்சுக்கு பரிசளித்த பிரதமர், இது தூத்துக்குடி முத்து. தூத்துக்குடி தமிழகத்தில் உள்ள ஒரு நகரம். இந்த நகரம் முத்து நகர் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், இங்குள்ள மீனவர்கள் இந்த தொழில் ஈடுபட்டு வருகிறார்கள்” என்றார்.