(கனகராசா சரவணன்)
இந்த வருடம் இரண்டு தேர்தல்கள் வருவதற்கான வாயப்புக்கள் இருக்கின்றது இதில் எந்த தேர்தல் முதல்வரும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிற்கு மட்டுமே தெரியும் எனவே அடுத்த ஜனாதிபதியாக வர நினைக்கின்ற எவருமே தமிழரசுகட்சியின் ஆதரவு இன்றி ஜனாதிபதியாக வரமுடியாதளவிற்கு தமிழரசு கட்சியைபலப்படுத்திக் கொள்வது தான் எங்களுக்கு தற்போது இருக்கும் பொறுப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்
தந்தை செல்வாவின் 126 ஜனனதினத்தையிட்டு 31-03-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழரசுக்சி ஏற்பாட்டில் ஆங்சலி செலுத்தும் நிகழ்வு மட்டக்களப்பில தந்தை செல்வா பூங்காலில் இடம்பெற்றது இதன் போது அவரது திருஉருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை தமிழரசு கட்சியின் முதலாவது மாநாட்டில் எந்தொரு சந்தர்பத்திலும் நான் எங்கள் மக்களையும் மண்ணையும் பாதுகாக்கும் வகையில் செயற்படவேண்டும் இல்லாவிடில் எங்கள் மக்களுக்கும் மண்ணுக்கும் எதிரான விடையத்தையும் செய்யக்கூடாது இதை பாதுகாப்பது தான் கட்சியின் பிரதானமான பொறுப்பு என தந்தை செல்வா சொன்னார். அன்று தொடக்கம் இன்று வரைக்கும் 75 வருடங்களுக்கு மேலாக இந்த மக்களுக்காக அரசியல் ரீதியாக தொடர்ச்சியாக குரல்; கொடுத்துவரும் ஒரு கட்சி தமிழரசு கட்சி மட்டும்தான்.
இன்று தமிழ் தேசிய அரசியலிலே கொலை கற்பழிப்பில் ஈடுபட்ட, கட்சிகளும் தாங்களும் தமிழ் தேசிய கட்சிகளாக காட்டிக்கொள்ள முயற்சித்திருந்தாலும் கூட இதில் போலியும் நல்லதும் இருக்கின்றது அவ்வாறு தமிழ் தேசிய பரப்பில் போலிகட்சிகளும் இருக்கின்றது ஆனால் தமிழருசுகட்சிதான் நல்ல கட்சி என அனைவருக்கும் தெரியும.;
இந்த வருடம் இரண்டு தேர்தல்கள் வரும் இருந்தபோதும் இலங்கை சட்டத்தின்படியும் அரசியல் அமைப்பின்படி முதலாவது ஜனாதிபதி தேர்தல்தான் வரவேண்டும். அதேவேளை இலங்கையில் நடக்கும் ஒரே ஒரு தேர்தல் மட்டும்தான் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைத்து செய்யக் கூடிய ஒரு தேர்தல் ஜனாதிபதி தேர்தல் இதஜல் எதிர்வரும் 6ம் மாதத்தின் பிற்பாடு ஜனாதிபதியின் பொறுப்புக்கள் அனைத்தும் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்க வேண்டும்.
உள்ளூராட்சி மாகாணசபை தேர்தல் பிற்போட்டது போல ஜனாதிபதி தேர்தலும் பிற்போட முயற்சி எடுக்கலாம் ஆனால் அவ்வாறான சூழ்நிலையில்; ஜனாதிபதி தேர்தல் தான் வரவேண்டும். ஆனால் ஜனாதிபதி ரணிலுக்கு தேர்தலில் தான் வெல்லக் கூடிய சூழ்நிலை இல்லாமல் போய்விடும் தனக்கு ஜனாதிபதியாக வரமுடியாத ஒரு சூழல் அமையலாம் என ஒரு சிந்தனை ஜனாதிபதிக்கு வந்;தால் அரசியல் அமைப்பின்படி பாராளுமன்றத்தை எப்பவேண்டும் என்றாலும் கலைக்கலாம்.
இவ்வாறான சூழிநிலை இரண்டரை வருடம் பூர்தியானதன் பிற்பாடு நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு போகலாம் எனவே இந்த இரண்டு தேர்தல்களும் இந்தவருடம் வருவதற்கான வாயப்புக்கள் இருக்கின்றது இதில் எது முதல்வரும் என ரணில் விக்கிரமசிங்காவிற்கு மட்டுமே தெரியும்.
எனவே இந்த நேரத்தில் தமிழரசு கட்சிக்கு என்ன பொறுப்பு இருக்கின்றது என்றால் 1977 க்கு முதல் தொகுதிவாரியாக நடந்த 1960 ம் ஆண்டு மாச் மற்றும் யூலை மாதத்தில் ஆகிய இரண்டு தேர்தல்களில் மாச்சில் நடந்த தேர்தலில் டட்லி சேனநாயக்காவின் ஆட்சியிலே தமிழ் மக்களுக்கு எதிரான சில தீர்மானங்கள் வருவதன் காரணமாக அந்த ஆட்சி மாற்றம் உருவாகுவதற்கு தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தான் காரணம் அப்போது தமிழர்களுக்கு பாதகமான நிலைவரும் போது மாற்றம் செய்யக் கூடிய அதிகாரம் இருந்தது
அதனை தொடர்ந்து 60 யூலையில் இடம்பெற்ற தேர்தலில் சிறிமா பண்டாரநாயக்கா ஆட்சிக்கு வந்தார் அதனை தொடர்ந்து 1965 இடம்பெற்ற தேர்தலில் தமிழரசு கட்சியின் ஆதரவுடன்தான் ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி அமைக்கப்பட்டது அதில் செனட்டராக திருச்செல்வம் இருந்தார்
இந்த விடையங்களை வைத்து பார்க்கும் போது 2015 ம் ஆண்டு நல்லாட்சியில் தமிழ் மக்களின் தேவை இருந்தது எனவே இந்த தேர்தல் வரும் நிலையில் தமிழரசுகட்சி வாக்குகளை எடுப்பதன் மூலம் 60 ம் ஆண்டு எவ்வாறு நாங்கள் நினைத்தால் ஆட்சி மாற்றத்தை கொண்டுவரமுடியும் என்ற சூழல் இருந்ததே அதேபோல மீண்டும் ஒரு ஆட்சி அதிகாரத்தை கூட மாற்றக்கூடியளவிற்கு எங்களை நாங்கள் பலப்படுத்தி கொள்ள வேண்டும்
2020 கோட்டா பகிரங்கமாக நான் சிங்கள மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி என சொன்னார் அவரே அகதியாக ஓடவேண்டிய சூழல் ஏற்பட்டது அதேவேளை இதே ஒரு நாளில் ஈஸ்ரர் குண்டுவெடிப்பு இடம்பெற்றது இந்த குண்டுவெடிப்பிற்கு அபிவிருத்திக்குழு தலைவராகவும் இராஜாங்க அமைச்சராகவும் இருக்கின்ற சிவநேரதுரை சந்திரகாந்தன் கொலை செய்ததான குற்றச்சாட்டுக்கள் சனல்4 முன்வைக்கப்படுகின்றது
இவ்வாறு மட்டக்களப்பில் மண்ணையும் மக்களையும் அழிக்கின்ற கட்சி இவர்களுக்கு 2020 மாவட்ட மக்கள் சில பொறுப்புக்களை வழ்ஙகியுள்ளனர் இதை மக்கள் உணர வேண்டும்
எனவே நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில்; எதிர்வரும் காலங்களில்; வாக்கு வங்கியை எவ்வாறு அதிகரிப்பது எங்களுடைய ஆதரவு இல்லை என்றால் அடுத்த முறை ஜனாதிபதியாக வர நினைக்கின்ற எவருமே ஜனாதிபதியாக வரமுடியாதளவிற்கு தமிழரசு கட்சியை பலப்படுத்திக் கொள்வது தான் எங்களுக்கு தற்போது இருக்கும் பொறுப்பு என்றார்.