மலையாள முன்னணி நடிகர் பிருத்வி ராஜ் கதாநாயகனாக நடித்த புதிய படம் ‘தி கோட் லைப்’ ( ஆடுஜீவிதம்). இப்படத்தில் கதாநாயகியாக அமலாபால் , வினீத், ஜிம்மி ஜீன் லூயிஸ் உள்ளிட்ட பலர் நடித்தனர். தேசிய விருது வென்ற இயக்குநர் பிளெஸ்ஸி இந்த படத்தை இயக்கினார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 6 வருடமாக நடந்துது. இப்படத்திற்காக பிருத்விராஜ் 31 கிலோ எடை குறைத்தார். படப்பிடிப்புக்காக சவுதி அரேபியாவில் இருந்து 250 செம்மறி ஆடுகள் மற்றும் 20 ஒட்டகங்கள் வாங்கப்பட்டன. இந்த படத்துக்கு பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்து உள்ளார்.கடந்த 28- ந் தேதி திரையரங்குகளில் இப்படம் ‘வெளியீடு’ செய்யப்பட்டது. தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியானது. இப்படத்தின் பிரீமியர் ஷோ’ பார்த்து நடிகர் கமல்ஹாசன், பிரபல இயக்குனர் மணி ரத்னம் உள்ளிட்ட பலர் வியந்து பாராட்டினார்கள். இந்நிலையில் 4- நாளாக திரையரங்குகளில் ‘ஹவுஸ் புல்’ காட்சிகளாக இப்படம் ஓடி வருகிறது. ரசிகர்கள் இப்படத்தை மிகுந்த உற்சாகமாக பார்த்து மகிழ்ச்சி அடைந்து பாராட்டி வருகின்றனர். மேலும் இப்படம் தற்போது 4 – நாட்கள் மட்டும் ரூ.50 கோடி வசூல் சாதனை படைத்து உள்ளது.
![''தி கோட் லைப்': 4 நாளில் ரூ.50 கோடி வசூல் சாதனை](https://uthayannews.ca/wp-content/uploads/2024/03/Pruthviraj-says-the-goat-life-aadujeevitham-movie.jpg)