சங்கானை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, அராலி மேற்கு ஜே/160 கிராம சேவகர் பிரிவுக்கான வின் ஸ்டார் இளைஞர் கழகத்தின் புதிய நிர்வாக சபைத் தெரிவு கடந்த 29-03-2024 அன்று ஜே/160 கிராம சேவகர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது தலைவராக செ.செந்தூரன் அவர்களும், செயலாளராக ம.சுகிர்தா அவர்களும் பொருளாராக சி.நிலைக்சன் அவர்களும், உப தலைவராக வி.நிலக்சனா அவர்களும், உப செயலாளராக ஜெ. அஜந்தா அவர்களும், அமைப்பாளராக பா.பிரதீப் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் திருமதி.வினோதினி, ஜே/160 கிராம சேவகர் திரு.சிந்துஜன், சங்கானை பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் திரு.மதன்ராஜ், மாவட்ட சம்மேளன உத்தியோகத்தர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் என பலரும் கலந்துகொண்டனர. இங்கே காணப்படும் படங்கள் அன்றைய தினம் எடுக்கப்பட்டதாகும்.