ஒன்றிய அரசு புள்ளி விவரத்தை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் அறிக்கை
சென்னை, ஏப்.2-முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள முகநூல் பதிவு வருமாறு;-
2021-இல் 1.7 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த தமிழ்நாட்டின் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி, நமது திராவிட மாடல அரசில் இப்போது 7.4 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது.
கூடுதல் தகவல்…
இது ஒன்றிய அரசின் புள்ளிவிவரம்!
எலக்ட்ரானிக்ஸ் மற்றும் செல்போன் ஏற்றுமதியில் முன்னணியில் நின்று, நாட்டின் ஏற்றுமதியில் 30% பங்கு வகிக்கும் நாம், நம் இலக்குகளை நோக்கி விரைந்து நடைபோடுவோம்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.