நடிகை வனிதா விஜயகுமார் – ஆகாஷ் தம்பதியின் மூத்த மகன் விஜய் ஸ்ரீஹரி. இந்நிலையில் வனிதா-ஆகாஷ் தம்பதிகளுக்கு இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக விவாகரத்து பெற்று உள்ளனர். இதனால் விஜய் ஸ்ரீஹரி தனது அப்பா ஆகாஷுடன் வசித்து வருகிறார். தற்போது விஜய் ஸ்ரீஹரி வாலிபனாக வளர்ந்து கதாநாயகன் தோற்றத்தில் உள்ளார். இந்நிலையில் ஸ்ரீஹரி தமிழ் சினிமாவில் ‘என்ட்ரி’ கொடுக்க உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து பிரபல இயக்குனர் பிரபுசாலமன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் விஜய் ஸ்ரீஹரி கதாநாயகனாக அறிமுகம் ஆக உள்ளார் என தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது.