கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் ‘ஈற்றோபிக்கோ நகரில் சிறப்பாக இயங்கிவரும்’ கிராமத்து வதனம்’ பெண்கள் அமைப்பின் ஏற்பாட்டில் ‘சர்வதேச மகளிர் தினம்-2024 கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மதியத்திற்குச் சற்று பின்னர் ஆரம்பமாகி மாலை வரை சிறப்பாக நடைபெற்றது.
அமைப்பின் தலைவி திருமதி கமலவதனா சுந்தா தனது சக அங்கத்தவர்களுடன் இணைந்து மேற்படி விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
இயல் இசை மற்றும் உரைகள் ஆகியன இடம்பெற்றன. அங்கு இடம்பெற்ற கலைநிகழ்ச்சிகளில் இளைய மற்றும் வளர்ந்த பெண்களின் பங்களிப்புக்கள் அதிகளவில் இருந்தன.
அன்றைய விழாவில் முக்கிய அம்சமாக ‘வதனம்’ என்னும் காலாண்டு சஞ்சிகை வெளியிடப்பெற்றது. மேற்படி சஞ்சிகையின் முதன்மை ஆசிரியராக எழுத்தாளர் குரு அரவிந்தனும் இணைஆசிரியராக செல்வி கவிநயா விஜயதர்ஷனும். நிர்வாக ஆசிரியராக கமலவதனா சுந்தாவும் இணைந்துள்ளார்கள். அத்துடன் மேலும் பல இளையோரும் இந்த வெளியீட்டு முயற்சியில் தங்களை இணைத்துக்கொண்டுள்ளார்கள்.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் தலைவர் அகணி சுரேஸ் அவர்கள் மேற்படி சஞ்சிகையின் வெளியீட்டுரையை ஆற்றிய பின்னர் அதனை வெளியிட்டு வைத்தார்.
அதன் பிரதிகளை சபையிலிருந்து எழுத்தாளர்களும் கவிஞர்களும் ஏனைய வாசகப் பெருமக்களும் பெற்றுக்கொண்டார்கள்.