தமிழில் ‘இமைக்கா நொடிகள்’, ‘அடங்க மறு’, ‘அயோக்யா’, ‘சிங்கத்தமிழன்’, ‘அரண்மனை 4’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ராஷிகன்னா தெலுங்கிலும் முன்னனி நடிகையாக இருக்கிறார். டில்லியை சேர்ந்தவரான ராஷிகன்னா ஐதராபாத்தில் 2015 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் இரண்டு வீடுகளை சொந்தமாக வாங்கி இருந்தார். தற்போது அங்கு 3-வது பங்களா வீட்டையும் அதிக விலை கொடுத்து வாங்கி இருக்கிறார். ராஷிகன்னாவுக்கு தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிகின்றன. இதனாலேயே ஐதராபாத்தில் அடுத்தடுத்து சொத்துகள் வாங்கி குவிப்பதாக கூறப்படுகிறது. புது வீடு வாங்கிய ராஷிகன்னாவுக்கு வலைதளத்தில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.