நாளை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகிறார். வெள்ளிக்கிழமை மாலை மதுரை வரும் அமித்ஷா சிவகங்கையில் நடைபெறும் ரோடு- ஷோவில் பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார். மறுநாள் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் காலை 9.50 மணிக்கு ரோடு-ஷோவில் பங்கேற்கும் அமித்ஷா பிற்பகல் 3 மணிக்கு நாகையில் நடைபெறும் பொதுக்கூட்டத்திலும், மாலை 6.30 மணிக்கு தென்காசியில் நடைபெறும் ரோடு-ஷோவில் பங்கேற்று வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபடுகிறார். சிவகங்கை பாஜக வேட்பாளர் தேவநாதனை ஆதரித்து காரைக்குடியில் நாளை அமித் ஷா வாக்கு சேகரிக்கிறார்.
![நாளை தமிழகம் வருகிறார் அமித்ஷா](https://uthayannews.ca/wp-content/uploads/2023/06/Amitsha.jpg)