விஜய் சேதுபதி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் அசோக் செல்வன். அதற்கடுத்து 2014 ஆம் ஆண்டு வெளியான தெகிடி படத்தின் மூலம் கதாநாயகானார். அவர் சமீபத்தில் நடித்து வெளியான ப்ளூ ஸ்டார் திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக ‘பொன் ஒன்று கண்டேன்’ படத்தில் நடித்துள்ளார். அசோக் செல்வனுடன் ஐஷ்வர்யா லக்ஷ்மி மற்றும் வசந்த் ரவி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். 2005 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் லைலா நடிப்பில் வெளியான ‘கண்ட நாள் முதல்’ படத்தை இயக்கிய பிரியா இப்படத்தை இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்தை தயாரித்து இசையமைத்துள்ளார். ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையைப் பெற்றுள்ளது. தற்பொழுது படத்தின் முன்னோட்டம் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.