தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகரசபையின் அனுசரணையோடு முல்லைத்தீவு முத்தையன்கட்டு கிராமிய மீனவர் அமைப்பினரால் செயற்படுத்தப்படும் சமூக பங்களிப்புடனான மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கள விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்தறிந்து கொண்டார்.
இன்றையதினம் குறித்த மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு சென்றிருந்த அமைச்சர் நிலையத்தின் செயற்பாடுகளை ஆராந்துள்ள நிலையில் அங்கு கைவிடப்பட்டுள்ள நிலையில் காணப்படும் மீன்குஞ்சு வளர்ப்பு தொட்டிகளை புனரமைப்பு செய்வதற்கான மதிப்பீடுகளை சமர்ப்பிக்குமாறு துறைசார் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
இதேநேரம் குறித்த தொட்டிகள் புரனமைக்கப்பட்டல் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை சுமார் பத்து இலட்சம் மீன் குஞ்சுகளை உற்பத்தி செய்யக்கூடிய நிலை தேற்றுவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டள்ளமை குறிப்பிடத்தக்கது.