குன்றம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் அருண் கே பிரசாத் இயக்கத்தில், எம் எஸ் பாஸ்கர் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, மாறுபட்ட களத்தில் வித்தியாசமான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம் “அக்கரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் நடிகர் எம் எஸ் பாஸ்கர் பேசியதாவது,
இந்தப்படத்திற்கு என் அக்கா மகன் மது வந்து, என் நண்பர் அருண் ஒரு படம் செய்கிறார் நீங்கள்தான் லீட் கேரக்டர் செய்யனும் என்றார். பார்க்கிங் மாதிரி நாயகனுக்கும் எனக்குமான கதையாக இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் கதை படு வில்லங்கமாக இருந்தது. இயக்குனரிடம் வேறு கதாநாயகன் நடிக்கலாமே என்றேன், ஆனால் அந்த வயது, நடிப்புக்கு நீங்கள்தான் சரியாக இருப்பீர்கள் எனச் சொல்லிச் சம்மதிக்க வைத்தார். வெண்பாவும், பிரியதர்ஷினியும் என் மகள்களாக அருமையாக நடித்துள்ளார்கள். படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துகள், என்றார்.