தமிழ் ஊடகவியலாளர்களை விலைக்கு வாங்க முயலும் அரசியல் கட்சிகள் ஊடகவியலாளர்களை தமது கைகளுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணப்பாடு வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் தொடர்க்கம் வளர்ந்து வரும் நாடுகளான இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் பிரவலாக உள்ளது.
அவ்வகையில் ஊடகவியலாளர்களை தமக்கு சாதகமாக வைத்திருக்க அவர்களுக்கு பல சலுகைகளை அரசுகள் அளிக்கவும் செய்கிறது. ஆனால் அது வெளிப்படுத்தப்படும் போது வேலை பறிபோவது என்னமோ அந்த செய்தியாளருக்கு தான். தேசிய அளவில் சில வேளைகளில் இது மிகப்பெரும் ஊழலாக வெளியாகி அரசுகள் கவிழ்ந்த வரலாறும் உண்டு.
இலங்கையிலும், அதிலும் குறிப்பாக தென்னிலங்கையிலும் செய்தியாளர்களை அரசு “மகிழ்ச்சியக வைத்திருக்கும்” நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. அதுவும் போர்க்காலத்தில் வடக்கில் நடைபெறும் விஷயங்களை மறைக்கவும், தமக்கு சாதகமான செய்திகளை தென்னிலங்கையில் பரப்பவும் ஊடகவியலாளர்கள் அதிலும் குறிப்பாக அரச சார்பு நிறுவனங்களின் செய்தியாளர்கள் நிர்பந்திக்கப்பட்டார்கள் அல்லது அவர்களுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டு அவர்கள் வழிக்கு கொண்டுவரப்பட்டார்கள்.
போர் முடிந்து 15 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், வடக்கே யாழ்ப்பாணத்திலும் அரசியல்வாதிகள் செய்தியாளர்களை சித்திரைப் புத்தாண்டு அன்று அழைத்து அன்பளிப்புகளை கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
அவ்வகையில் யாழ்ப்பாணம் ஊடகவியலாளர்களிற்கு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் பண உதவி புரிவதாக பல்தரப்பிலிருந்து தகவல்கள் கசிந்துள்ளது.
2024 ஆம் ஆண்டு பிறந்தபோது யாழ் நகரின் ஓர் விடுதிக்கு ஊடகவியலாளர்கள் 20பேரை அழைத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விருந்தோடு 10 ஆயிரம் ரூபாவிம் வழங்கியிருந்தார்.
தற்போது சித்திரைப் புத்தாண்டிற்கும் சிறிதர் திரைரங்கிற்கு செய்தியாளர்களை அழைத்து அவர்களுக்கு தலா 20 ஆயிரம் ஆயிரம் ரூபா பண அன்பளிப்பு வழங்கியிருக்கிறார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேநேரம் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சித்திரைப் புத்தாண்டிற்கு அவரது கந்தரோடையில் உள்ள வீட்டிற்கு ஊடகவியலாளர்களை அழைத்து தலா 10 ஆயிரம் ரூபா என கைவிசேசமாக வழங்கியிருந்தார்.
இவ்வாறே வடமராட்சி தமிழ் அரசுக் கட்சியின் அலுவலகத்தில் வருட தினத்தன்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது ஆதரவாளர்கள் சகிதம் சில ஊடகவியலாளர்களையும் அழைத்து 500 ரூபா வீதம் கைவிசேசம் வழங்கியுள்ளார்.
ஊடகவியலாளர்கள் இவ்வாறு பலரிடமும் பணம் பெற்றமை பொதுவெளியில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் செய்தியாளர்களின் பக்கசார்பின்மை குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
இந்த நிலையில் யாழ்ப்பாணம் சிறிதர் தியட்டரில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஊடக சந்திப்பில் பங்குகொண்ட ஊடகவியலாளர்களில் வீட்டு வசதியற்ற ஊடகவியலாளர்கள் உங்கள் விபரங்களைச் சமர்ப்பித்தால் வீட்டு வசதி ஏற்படுத்தி கொடுக்கலாம் என அமைச்சர் தெரிவித்தநிலையில் 20 பேர் வரையான ஊடகவியலாளர்கள் அதற்கும் பெயர் விபரங்களை சமர்ப்பித்துள்ளதாக அறிய முடிகிறது.