பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விக்ரம் இயக்குநர் பா.ரஞ்சித்துடன் இணையும் திரைப்படம் ‘தங்கலான். பா.ரஞ்சித்தின் தனது ‘நட்சத்திரம் நகர்கிறது படத்திற்கு பிறகு இந்தப் படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகை பார்வதி, மாளவிகா மோகனன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ‘தங்கலான்’ திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக பா.ரஞ்சித்துடன் இணைந்துள்ளார் ஜிவி பிரகாஷ். இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரித்துள்ளது. இந்த தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் இந்த திரைப்டம் வெளியாக உள்ளது.
‘தங்கலான்’ திரைப்படன் முன்னோட்டம் அண்மையில் வெளியாகி திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்நிலையில், விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு ‘தங்கலான்’ திரைப்படத்தின் காணொளியை படக்குழுவினர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதில், இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தங்கலான் என தெரிவித்துள்ளனர். மேலும் அந்த காணொளியில் விக்ரம் அவரது கதாபாத்திரத்திற்காக தயாராகும் முறை மற்றும் அவரது அர்ப்பணிப்பை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த காணொளி தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.