பு.கஜிந்தன்
மருத மடு அன்னையின் திருச் சொருப பவனி நெல்லியடி கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் 16-04-2024அன்று பிற்பகல் 5:00 மணிக்கு வருகைதந்துள்ளதுடன் அங்கு சிறப்பு வழிபாடுகளும் இடம் பெற்றது.
மறு நாள காலை 18/04/2024 7 மணிவரை சிறப்பு வழிபாடுகள் இடம் பெற்றதுடன் காலை 7 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு பருத்தித்துறை சக்கோட்டை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலயத்தில் காலை 8:00 மணிமுதல் பிற்பகல் நான்கு மணிவரை சிறப்பு வழிபாடுகள் இடம்பெற்றன.
மருத மடு மாதாவின் வருகையால் நெல்லியடி நகரமே விழாக்கோலம் பூண்டு காணப்பட்டது.
யாழ் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகைதந்தனர்.நெல்லியடி போலீசார் மற்றும் சிறப்பு அதிரடி படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டனர்.