நடராசா லோகதயாளன்
சர்வதேச தரத்திலான விளையாட்டரங்கு ஒன்றை நகர அபிவிருத்தி அதிகார சபை செம்மணியில் நிறுவ முயல்கின்றது. ஆனால் இதனை தீவகத்தில் நிறுவி அப்பகுதியினையும் அபிவிருத்தி கண்ட பகுதியாக மாற்ற வேண்டும் என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா ஆகியோர் தலைமையில் வியாழக்கிழமை 18-04-2024 இடம்பெற்ற சமயமே இவ்வாறு தெரிவித்ரார்.
4 ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் பிரஸ்தாபிக்கப்பட்டுவரும் இந்த விளையாட்டு வளாகத்தை செம்மணியில் முன்னர் உப்பளம் அமைந்த பகுதியில் அமைக்க எடுக்கும் முயற்சியை கைவிட வேண்டும். ஏனெனில் குடாநாட்டிற்கான நண்ணீர்த் திட்டம் இப் பகுதியின் ஊனூடாகவே வரும் சமயம் பாரிய கட்டிடங்கள் வரும்போது அவை தடையாக அமையும்.
மழை காலத்தில் நீர் ஓட்டம் தடைப்பட்டு வயல் நிலங்கள் அழிவடைவதோடு நகரின் மத்திக்கான நுழைவாயிலில் இது பொருத்தமற்ற திட்டம்.
இதேநேரம் மன்டைதீவில் இலங்கை வானொலிக்கு வழங்கிய 100 ஏக்கரில். இருந்து 30 ஏக்கரை வழங்குவதனால் தீவுப் பகுதிக்கு மைதானம் அமைப்பதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற இது பொருத்தமான திட்டமாக காணப்படுவதனால் அங்கே அமைப்பதனை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும் ஏற்றுக்கொள்வதனால் தீவத்தில் இந்த விளையாட்டரங்கை அமைப்பதனையே கண்டிப்பாக பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு மாற்று பரிசீலனையை அதகாரிகள் ஏன் மறுக்கின்றனர் எனப் புரியவில்லை என்றார்.