ஒன்றாரியோ முதல்வர் டக் போர்ட் அவர்களின் சிந்தனையின் விளைவாக ரொறன்ரொ பெரும்பாகத்தில் இரண்டாவது மருத்துவ வளாகம் உருவாகின்றது என்று அறிவித்துள்ளார் எமது ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதியின் மாகாண பாராளுமன்ற உறுப்பினரும் மாகாண போக்குவரத்து அமைச்சின் துணை அமைச்சருமான விஜய் தணிகாசலம் அவர்கள்;
அவர் விடுத்துள்ள அறிக்கையில்
” எமது ஒன்றாரியோ மாகாணத்தில் தற்போது மருத்துவர்களுக்கு அதிக தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பலர் தங்களுக்கான குடும்ப மருத்துவர் ஒருவர் இல்லாததை மிகவும் கவனிப்புடன் நோக்கிய எமது மாகாண முதல்வர் டக் போர்ட் அவர்கள் யோர்க் பல்கலைக்கழகத்தில் ஒரு புதிய மருத்துவப் பள்ளியை உருவாக்க சம்மதம் தெரிவித்து அதனை அங்கீகரித்துள்ளார்;
இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்ட ஸ்காபுறோ வளாகத்தில் உருவாகும் மருத்துவ பீடம் தற்போது நிர்மானிக்கப்பட்டு வருகின்றது.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக மருத்துவக் கல்வி முறையின் மிகப்பெரிய விரிவாக்கத்தைத் தொடங்குவதன் மூலம், சுகாதாரப் பணியாளர்களை வளர்க்க நமது அரசாங்கம் வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை எடுத்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நிச்சயமாக, UTSC இல் ஸ்கார்பரோவில் உள்ள முதல் மருத்துவ வளாகமும்; இதில் அடங்கும், இது ஏற்கனவே நடந்து வருகிறது.
எங்களின் சமீபத்திய வரவு செலவுத் திட்டத்தில், வோன் நகரில்உள்ள யோர்க் பல்கலைக்கழகத்தின் புதிய மருத்துவப் வளாகத்தின் வடிவமைப்பு மற்றும் திட்டமிடலுக்கு ஆதரவாக எங்கள் அரசாங்கம் $9 மில்லியன் முதலீடு செய்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை நான் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்” என்று ஸ்காபுறோ ரூஜ் பார்க் தொகுதியின் மாகாண பாராளுமன்ற உறுப்பினரும் மாகாண போக்குவரத்து அமைச்சின் துணை அமைச்சருமான விஜய் தணிகாசலம் அவர்கள் தெரிவித்துள்ளார்