முன்னாள் அமைச்சரும் அமைப்பின் தீவிர செயற்பாட்டாரும் கனடிய கணக்காளருமான நிமால் விநாயகமூர்த்தியின் வேட்பு மனு நிராகரிப்பு
கனடாவில் தோன்றியுள்ள ‘எழுச்சியை’ மழுங்கடிக்கும் வகையில் ‘பதவி ஆசை’ கொண்டவர்கள் அரங்கேற்றும் பழிவாங்கல்கள்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்னும் பலம் நிறைந்த அமைப்பு 2010ம் நிறுவப்பெற்றது. விடுதலைப் புலிகள் அமைப்பின் வீழ்ச்சிக்குப் பின்னர் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது தாயக உறவுகளுக்கான குரல் கொடுக்கும் வகையில் தோற்றுவிக்கப்பெற்ற அற்புதமான ‘கருப்பொருளை’ தங்கள் கைகளில் எடுத்து செயற்படும் வகையில் உலகின் பல நாடுகளில் வாழும் பலரும் இயங்கிவருகின்றார்கள்.
நாடு கடந்த அரசாங்கத்தின் 4வது பாராளுமன்றத்திற்கான அரசவை உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் எதிர்வரும் மே மாதம் 5ம் திகதியன்று உலகின் தமிழர்கள் வாழும் நாடுகள் பலவற்றில் தேர்தல் நடைபெறவுள்ளது
கனடாவிலும் இந்த தேர்தல் சிறப்பாகவும் ஜனநாயக முறையிலும் நேர்மையாக நடத்தப்பெற்று சிறப்பாகச் செயற்படும் சுமார் 25 அங்கத்தவர்.களை தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த தேர்தலிலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திலும் தீவிரமாக செயற்படும் வகையில் பலர் ஆர்வம் காட்டி வருகின்றார்கள்
இந்த வகையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சரும் கனடிய கணக்காளரும், தீவிரமான செயற்பாட்டாளருமான நிமால் விநாயகமூர்த்தி மற்றும் பலர் இணைந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்னும் செயற்பாட்டு அமைப்பில் பலரையும் இணைத்து அதனை ஒரு பலமுள்ள அமைப்பாக கனடாவில் வளர்த்தெடுக்க கடந்த பல வருடங்களாக இயங்கிவருகின்றார்கள். அவர்கள் அனைவரும் தங்கள் பொருள் மற்றும் நேரம் அனைத்தையும் அர்ப்பணித்து இயங்கிவருகின்றார்கள்.
நாடுகடந்த அரசாங்கத்தில் பலரையுயும் இணைத்து அதனை ஒரு பலமுள்ள அமைப்பாக கனடாவில் செயற்படும் வகையில் அதிகளவு அங்கத்தவர்களையும் பொது மக்களையும் ஈடுபாடு கொள்ளச் செய்யும் வகையில் மக்கள் மத்தியில் பணியாற்றத் தொடங்கினார்கள்.
இதனால் கனடாவில் மக்கள் விரும்பும் ஒரு அமைப்பாக நாடு கடந்த அரசாங்கம் மாற்றம் பெற்று வரும் நிலையில் அதை ‘நாசம்’ செய்யும் வகையில் கனடாவில் தான்தோன்றித்தனமாக செயற்படும் அதன் தேர்தல் அலுவலர்கள் தங்கள் ‘கைவரிசையை’ காட்டத் தொடங்கியுள்ளார்கள்
இவ்வாறான ‘நாசகார’ செயற்பாடுகளை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டுள்ள சிலர் முன்னாள் அமைச்சரும் அமைப்பின் தீவிர செயற்பாட்டாரும் கனடிய கணக்காளருமான நிமால் விநாயகமூர்த்தியின் வேட்பு மனுவை நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்கள். இதனால் கனடா வாழ் அரசியல் ஆர்வலர்கள் பலர் இந்த அநியாயமான நடவடிக்கைக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள்
கனடாவில் தோன்றியுள்ள ‘எழுச்சியை’ மழுங்கடிக்கும் வகையில் ‘பதவி ஆசை’ கொண்டவர்கள் அரங்கேற்றும் பழிவாங்கல்கள் என்றே இந்த விடயத்தை அவர்கள் கருதுகின்றார்கள்.
கனடாவில் தோன்றியுள்ள எழுச்சியானது எதிர்காலத்தில் நாடு கடந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளைகளை அதிகரிக்கச்செய்யும் என்றும் கனடாவில் மக்கள் ஆதரவு இந்த அமைப்பிற்கு பெருகும் என்ற வகையில் ;பதவி ஆசை’ கொண்ட சில ‘விசமிகள்’ இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வருகின்றார்கள் என அறியப்படுகின்றது.
அத்துடன் அவர்கள் கனடாவில் ஒரு குடையின் கீழ் இயங்கிவரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ள பலரையும் தடுத்து நிறுத்தும் வகையிலும் செயற்பட்டு வருகின்றார்கள் என்றும்இதனால் புதிதாக இணைந்துள்ள பலரது விண்ணப்பங்களையும் வேட்பு மனுக்களையும் நிராகரிப்பது என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது எனவும் பல அன்பர்கள் அறியத்தந்துள்ளார்கள்
இவ்வாறான நிலையில் திரு நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் தனக்கு எதிராக நியாயமற்ற முறையில் நடவடிக்கை எடுத்துள்ளமைக்கு சட்ட ரீதியாக நியாயம் தேடும் வகையில் ஈடுபட்டுள்ளார் எனவும் அறியப்படுகின்றது