இன்றைய மாறிவரும் உலகில் அதிகமான குற்றச் செயயல்கள் இடம்பெற்று குற்றவாளிகளும் அதிகரித்து வருகின்றனர்.இத்தகைய குற்றவாளிகளைப் புணர்வாழ்வளித்து அவர்களைச் சமுதாயத்தோடு இணைக்கின்ற மிக முக்கியமான பணியினை யாழ்ப்பாணச் சிறைச்சாலை வழங்குகின்றது. இங்கே சுமார் எழுநூறிற்கும் அதிகமான கைதிகள் புணர்வாழ்வளிக்கப்படுகின்றனர்.
பல்வேறு குற்றங்கள் புரிந்த கைதிகள் இருந்த போதும் அதிகளவான கைதிகள் போதைப் பொருளுக்கு அடிமையாகித் தடுத்து வைக்கப்பட்டவர்கள் ஆவார் ஆண் கைதிகள் மட்டுமன்றி பெண் கைதிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள கைதிகளைப் புணர்வாழ்வளித்து குறிப்பாகப் பெண் கைதிகளுக்கான மறுவாழ்வுச் சிகிச்சைத் திட்டம் ஒன்றை INTERNATIONAL MEDICAL HEALTH ORGANIZATION (IMHO) RATNAM FOUNDATION இணைந்து கடந்த 13.04.2024 அன்று யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர் இது பெண்களுக்கான தையற் பயிற்சிநெறி ஆகும் இந் நிகழ்வை யாழ்ப்பாணம் சிறைச்சாலை ஒழுங்குபடுத்தியிருந்தது. இந் நிகழ்வின் பிரதம அதீதியாக அனைத்துலக மருத்துவ நல அமைப்பின் தலைவி ராஜம் தெய்வேந்திரம் அம்மணி நிகழ்வினை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார். நிகழ்விற்கு யாழ்ப்பாண நீதவான் ஆனந்தராசா சிறைச்சாலை அட்தியட்சகர் இந்திரகுமார் NAITA முகாமையாளர் திருமுருகன் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பிரதம அதீதியாகக் கலந்து நிகழ்வினை அங்குரார்ப்பணம் செய்து வைத்த ராஜம் தெய்வேந்திரம் அம்மணி உரையாற்றுகையில் குற்றம் செய்தவர்கள் வாழ்நாள் முழுவதும் குற்றவாளிகள் அல்ல சந்தர்ப்ப சூழ்நிலையால் குற்றம்; நிகழ்கின்றது இந்தக் குற்றங்களிலிருந்து நீங்கள் எவ்வாறு வெளிவர வேண்டும் மீண்டும் இத்தகைய குற்றங்கள் இடம்பெறாது இருப்பதற்கு உங்களை எவ்வாறு தயார் செய்ய வேண்டும் நீங்கள் உங்களுக்கான தொழில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அதில் பயணிக்க வேண்டும் அதற்காகவே இச் சிறிய முயற்சி முன்னெடுக்கப்படுகின்றது நீங்கள் அனைவரும் இதனை ஒரு அத்திவாரமாகக் கொண்டு உங்களுக்கான தொழிலை அடையாளம் ;கண்டு சமூகத்தோடு இணைந்து நற் பிரiஐயாக வாழவேண்டும் என்று குறிப்பிட்டார்.
நீதவான் ஆனந்தராஐh உரையாற்றுகையில் நீங்கள் நற்பிரiஐயாக சீர்திருத்தப்பட்டு சமூத்தோடு உங்களை இணைக்கின்ற நோக்கத்தோடு உங்களை நான் சிறைப்படுத்தினேன் சிறைக்கு உள்ளே இவ்வாறான திட்டம் ஒன்றை ஒழுங்குபடுத்தியமை உண்மையில் ஒரு வரப்பிரசாதம் ஆகும் இதை நீங்கள் சரியாகப் பயன்படுத்த வேண்டும். இத் திட்டத்தை இங்கு அறிமுகப்படுத்திய ஐஆர்ழு மற்றும் RATNAM FOUNDATION ஆகியோருக்கு பாராட்டுக்களையும் வணக்கத்தையும் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார்.
சிறைச்சாலை அத்தியட்சகர் இந்திரகுமார் உரையாற்றுகையில் இத்தகைய திட்டம் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் அங்குரார்ப்பணம் செய்ததையிட்டு தான் பெருமையடைவதாகவும் இத் திட்டத்தை அறிமுகப்படுத்திய ராஜம் தெய்வேந்திரம் அவர்களிற்கு வணக்கத்தையும் நன்றியையும் தெரிவிப்பதாகக் குறிப்பிட்டார் அத்துடன் இத் திட்டம் வெற்றியடைவதற்குறிய முழு ஒத்துளைப்புக்களையும் தான் வழங்குவதாகவும் குறிப்பிட்டார். இந் நிகழ்வில் கலந்துகொண்ட பெண் கைதிகள் ராஜம் தெய்வேந்திரம் அம்மணிக்கு தமது நன்றியைத் தெரிவித்ததோடு தமது மனக் குறைகளையும் கஸ்டங்களையும் தெரிவித்தனர்.
தொடர்து அம்மணி சிறைச்சாலையின் பகுதிகளைப் பார்வையிட்டார்
இவ்வாறான சமுதாயத்திற்குப் பொருத்தமான தேவையாக விடயங்களை உரிய நேரத்தில் காலத்தின் தேவையை அறிந்து சேவையாற்றுகின்ற INTERNATIONAL MEDICAL HEALTH ORGANIZATION (IMHO) RATNAM FOUNDATION அதில் சேவையாற்றுகின்ற உறுப்பினர்கள் போற்றுதற்கும் வணக்கத்திற்கும் உரியவர்கள்
“ மறுமை நோக்கின்று இவர்கள் கைவண்மை”