திமுக எம்பி கனிமொழி போட்டியிடும் தூத்துக்குடி மக்களைவைத் தொகுதியில் வாக்குப்பதிவு சதவீதம் எவ்வளவு என்பதில் முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதம் 72 சதவீதத்திற்கு மேல் என தமிழக தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹு தெரிவித்த நிலையில் டெல்லியில் இருந்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் வாக்குப்பதிவு சதவீதம் 69.46 என்று தெரிவிக்கப்பட்டது.
அதில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 70 சதவீதம் என முதலில் அறிவிக்கப்பட்டது 59.96 என குறைவாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இது மக்கள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில்இன்று (ஏப் 21 பிற்பகலில் தூத்துக்குடி மாவட்ட ஆட் சியர் லட்சுமிபதி வெளியிட்ட அதிகாரபூர்வ செய்திக் குறிப்பில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் 66.88 சதவீத வாக்குப்பதிவு ஆகியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. (ஆட் சியரின் செய்திக்குறிப்பு விவரம் இத்துடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது).
தமிழ்நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள இந்த குழப்பத்திற்கு தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு விளக்கம் அளிக்கவேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.