லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது திரைப்படத்திற்கு ‘கூலி’ என பெயரிடப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் ‘வேட்டையன்’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்துக்கு தற்காலிகமாக தலைவர்-171 என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், திரைப்படத்தில் ரன்வீர் சிங் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ருதி ஹாசன் ரஜினிக்கு மகளாக நடிக்கவுள்ளார் மற்றும் நாகார்ஜுனா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவுள்ளனர் என்ற தகவல் வெளியாகியது. இதைதொடர்ந்து திரைப்படத்தின் முதல்காட்சி மற்றும் திரைப்படத்தின் பெயரை படக்குழு வெளியிடவுள்ளனர். இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் அவரது எக்ஸ் பக்கத்தில் இந்த திரைப்படத்தின் டி.ஐ.எஸ்.சி.ஒ என்ற தலைப்பில் பதாகை வெளியிட்டார். இந்த திரைப்படத்தின் தலைப்பு டிஸ்கோவாக இருக்குமோ என ரசிகர்களிடம் கேள்வி எழுந்த நிலையில், தற்போது திரைப்படத்தின் பெயர் ‘கூலி’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது.