இன்று, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்தியர் சமன் பத்திரன அவர்கள் தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
கடந்தகாலத்தில் சுகாதார சேவைகள் பணிப்பாளராக பணியாற்றியவர் இடமாற்றம் பெற்றுச் சென்ற நிலையில் வைத்தியர் சமன் பத்திரன அவர்கள் இவ்வாறு 23-04-2024 அன்றையதினம் பதவியேற்றுள்ளார்.
வடக்கு மாகாணத்தின் புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், எதிர்வரும் 4 வருடங்களுக்கு, நான் இன மத மொழிக்கு அப்பால் சென்று அனைவரது சுகாதார மேம்பாட்டிற்கும் என்னால் இயன்ற சேவையை வழங்குவேன் என்றார்.