மன்னார் நிருபர்
24.04.2024
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்கள் த புதன்கிழமை (24-04-2024) மதியம் மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக அமைதி வழி போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்
சம்பள உயர்வு,மேலதிக நேர கொடுப்பனவு,பதில் கடமை,காகிதாகி செலவுகள் உள்ளடங்களாக பல்வேறு கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்வதில் பல வருடங்களாக நீடித்து வரும் இழுபறி நிலை யை உடனடியாக நிவர்த்தி செய்து தருமாறு கோரி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான மாதாந்த கொடுப்பனவை அரச சுற்றறிக்கை க்கு அமைவாக 7500 ரூபாய் அதிகரித்து வழங்கு,பதில் கடமைக்கான கொடுப்பனவை வழங்கு, இல்லாவிட்டால் பதில் கடமையை நிறுத்து,வெளிக்கள கொடுப்பனவை 300 இல் இருந்து 3000 ரூபாவாக அதிகரி,காகிதாகி கொடுப்பனவை பெற்று தாருங்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு சம்பந்த மற்ற வேலைகளை திணிக்காதே போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
11 வருடங்களுக்கு மேலாக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் இதுவரை பிரச்சினைகள் தீர்க்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது