கடந்த இதழில் பிரசுரமான கட்டுரையின் தொடர்ச்சி
சிறப்புரை வி.தேவராஜ்
“சி.வி.வேலுப்பிள்ளையின் ஆங்கிலக் கவிதைகளை தமிழ் மொழியில் தந்தவர் சக்தி பாலையா.
“புழுதிப் படுக்கையில்
புதைந்த என் மக்களைப்
போற்றும் இரங்கற்
புகழ் மொழி இல்லை;
பழுதிலா அவர்க் கோர்
கல்லறை இல்லை;
பரிந்தவர் நினைவுநாள்
பகருவார் இல்லை.
ஊணையும் உடலையும்
ஊட்டி இம் மண்ணை
உயிர்த்த வர்க்(கு) இங்கே
உளங்கசிந் தன்பும்
பூணுவாரில்லை – அவர்
புதைமேட்டிலோர் – கானகப்
பூவைப் பறித்துப்
போடுவாரில்லையே.”
இரண்டாவது கவிதை
“ஆழப் புதைந்த
தேயிலைச் செடியின்
அடியிற் புதைந்த
அப்பனின் சிதைமேல்
ஏழை மகனும்
ஏறி மிதித்து
இங்கெவர் வாழவோ
தன்னுயிர் தருவன்.
என்னே மனிதர்
இவரே இறந்தார்க்கு
இங்கோர் கல்லறை
எடுத்திலர்! வெட்கம்
தன்னை மறைக்கத்
தானோ அவ்விறைவனும்
தளிர் பசும் புல்லால்
தரை மறைத்தனனோ!”
⦁ மலையகம் சம்பந்தப்பட்ட மக்கள் இலக்கியம் இவ்விலக்கியத்தின் அடியாக தோன்ற வேண்டியவையே. சி.வி.வேலுப்பிள்ளை என்.எஸ்.எம். இராமையா முதலானோரின் படைப்புகள் நாட்டார் இலக்கியத்தின் மறு பதிவுகளாக காணப்படுகின்றன எனக் கூறலாம்.
மலையக நாட்டார் பாடல்களை நுண்ணியத்துடன் நோக்குகின்ற போது மலையக வாழ்வியலை அடியாகக் கொண்டு தோற்றம் பெற்ற முதல் இலக்கிய படைப்புகளாக இவை அமைந்து காணப்படுகின்றன என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்..
⦁ அதே வேளையில் வாய் மொழிப் பாடல்களில் எராளமான வரலாற்றுத் தகவல்களை உள்ளடக்கிய பாடல்களை மலையகத்திலேயே காண முடிகின்றதென்பதை சி.வி.வேலுப்பிள்ளை ஏ.வி.பி.கோமஸ் சாரல்நாடன்ஆகியோரால் எழுதப்பட்டுள்ள மலைநாட்டு மக்கள் பாடல்கள் (1983) அங்கமெல்லாம் நெறஞ்ச மச்சான் (1988) மலையக வாய் மொழி இலக்கியம் (1993) என்ற நூல்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
“ஆரம்ப கால மலையக எழுத்து இலக்கியம்” மலையக மக்கள் மத்தியில் இருந்து எழவில்லை.
பெருந்தோட்ட பயிர்ச் செய்கையுடன் அழைத்து வரப்பட்ட பயிர்ச் செய்கையாளர்களே இலங்கையில் ஒரு புதிய இலக்கிய தோற்றத்திற்குக் காரணமாயினர்.
பயிர்ச்செய்கையை அறிமுகம் செய்த ஆங்கிலேயர்களில் பெரும்பாலானவர்களுக்கு முறையான படிப்பில்லை. ஒரு சிலர் தங்களது படிப்பறிவினால் இலங்கை மலைப் பிரதேசங்களில் ஏற்பட்டு வரும் புதிய மாற்றங்களையும் உள்ளுர் வாசிகளிடம் அதனால் ஏற்பட்டு வரும் மாற்றங்களையூம் மனோபாவத்தையும் எழுத்தில் வடித்துள்ளனர். இவ்வாறு கட்டுரை வடிவத்தில் அமைந்ந பல நூல்களும் அடங்குகின்றன.
வில்லியம் நைட்டோன் “கானக வாழ்வு என்ற பெயரில் இரண்டு பாகங்களில் ஒரு நாவலை முறையே 1854 – 1868 என்ற கால வரிசையில் வெளியிட்டுள்ளார்..
அதே வேளையில் தேட்டப் பயிர்ச் செய்கையாளர்கள் தமது அனுபவங்களைத் தமது மொழியில் பிரித்தானியருக்கு கொடுத்துக் கொண்டிருந்தனர் என்கிறார் யஸ்மின்.
இதே நிலப்பரப்பில் பல்லாயிரக்கணக்கில் குடியேறிய இதுவரை காலம் தாம் அறிந்திராத அநுபவங்களைத் தரிசித்த தமிழ் மொழி பேசிய கூட்டத்தினரின் சுவடுகள் ஆங்காங்கே இந்த ஆங்கிலப் படைப்புக்களில் காணக் கிடைக்கின்றதே தவிரத் தமிழ் மொழியில் எழுத்திலக்கியமாக இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம்வரை எதையும் கூறுவதற்கில்லை.
பிரசார எழுத்து
19ஆம் நூற்றாண்டின் இறுதியில் மலையக மக்களை தொடர்ந்தும் பயிர்ச் செய்கைகளில் ஈடுபடுத்த வேண்டியிருந்ததினால் பிரசார நோக்கில் கோப்பிக் கிருசிக் கும்மி என்றும் தேயிலைக் கிருசி கும்மி என்றும் பிரசுரங்கள் வெளியாகின.
“சுத்தமான சிலோன் தேயிலையைக் குடியுங்கள்” ; என்று பல்லாயிரக் கணக்காண துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. இவை பணம் கொடுத்து எழுதப்பட்ட பிரசார பிரசுரங்களாகும். .இந்தப் பிரசுரங்கள் தமிழ்த் தொழிலாளர்களைக் கவர்வதற்காக தோட்டத்துறை சார்ந்த நிர்வாக தமிழ் உத்தியோகத்தர்களால் எழுதப்பட்டவையாகும்.
1869 ஆம் ஆண்டு ஏ.ஜோசப் என்ற தோட்டக் கண்டக்டர் ஒருவரால் எழுதப்பட்ட கிருசிக்கும்மி யாழ்ப்பாணத்தில் பதிப்பிக்கப்பட்டு மலையக மக்களிடையே இலவசமாக விநியோகிக்கப்பட்டது.
1920 இல் மாற்றம்
இந்த மக்களின் கிணற்றில் விழுந்த கல்லாகக் கிடந்த வாழ்க்கையில் சலனம் ஏற்படத் தொடங்கியது 1920 களுக்குப் பிறகுதான். 1823 ஆம் ஆண்டில் இருந்து மாற்றத்தை 97 வருடங்களுக்குப் பிறகே காணக் கூடியதாக இருந்தது. அந்தளவுக்கு இந்த மக்கள் இறுக்கமான காலனித்தவ கட்டமைப்புக்களால் அடக்கி ஒடுக்கப்பட்டவர்களாக வைக்கப்பட்டிருந்தனர். தோட்டங்களில் வெளியார் எவரும் நுழைய முடியாத வகையிலும் கிராம மக்களுடன் தொடர்புகள் அற்ற மக்களாக வைக்கப்பட்டிருந்தனர்.
கோ.நடேச ஐயர் தோட்டங்களுக்குள் நுழைய முடியாத நிலையிலும் புடவை வியாபாரியாகத்தான் தோட்டங்கில் நுழைந்து மக்களைச் சந்தித்தார்.
அதுமாத்திரமல்ல நடேச ஐயர் தொழிற்சங்க அரசியல்வாதியாக மாறி ஆரம்பகாலத்தில் கொழும்பில் இருந்தே மலையகத்திற்குச் சென்று வந்தார். ஹட்டனில தொழிலாளர்கள் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜராகி அன்றைய தினமே கொழும்பு திரும்புவது வழக்கம். காலப் போக்கில் நீதிபதி நடேச ஐயர் ஆஜராகின்ற வழக்ககளை இரண்டு மணிக்குப் பிறகே விசாரணைக்கு எடுப்பார். கொழும்புக்கான கடைசி புகையிரதம் 1.30 க்கு அட்டனில் இருந்து புறப்பட்டுவிடும். எனவே அவர் கொழும்புக்கு வர முடியாது. தோட்டத் தொழிலாளர்கள் குடியிருக்கும் லயத்துக் காம்பிராவிலேயே தங்கிவிடுவார். இதன் காரணமாக நடேச ஐயர் மலையகத்திலேயே தனது மனைவியுடன் தங்கி தனது பணியினை மேற் கொண்டார்.
⦁ இந்தக் காலப் பகுதியில் 1920க்குப் பிறகு 20க்கு மேற்பட்ட பத்திரிகைகள் தோற்றம் பெற்றன. இந்தப் பத்திரிகைகள் அனைத்தும் மலையக மக்களை தட்டி எழுப்பவதாகவே செயற்பட்டன.
தேசபக்தன் கோ.நடேச ஐயர் அவர்களின் இலங்கை இந்தியன் – சத்யமித்ரன் போன்ற பத்திரிகைகளின் பணி 1920 ஆம் ஆண்டிலிருந்து 1930ஆம் ஆண்டு வரையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
கோ. நடேச ஐயர் அவர்கள் மலையக மக்களிடையே தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு இலக்கியத்தை ஒரு சாதனமாக பயன்படுத்தினார்.
1924 இல் நடேசஐயர் தேசபக்தன் என்ற இதழைத் தொடங்கினார். அரசியலில் செல்வாக்குடன் அவர் இருந்த போதும் தேசபக்தனில் எழுதுவதை அவர் நிறுத்தவில்லை.
நடேச ஐயரின் இப்பெரும் பணியில் தோள் கொடுத்தவர் அவரின் மனைவி மீனாட்சி அம்மையார்.
தொழிலாளர்களுக்காக இருவரும் இணைந்து பாடிய “சட்டக் கும்மி” பாடல்கள் தொழிலாளர்களைத் தட்டி எழுப்பியது.
புதிய மலையக ஆத்திசூடி
தேசபக்தன் இதழின் முகப்பில் புதிய மலையக ஆத்திசூடிப் பாடல்களை பதிப்பித்த கோ. நடேச ஐயர் அதனை இலங்கை முழுவதும் பரவச் செய்தார்.
அவர் எழுதிய நூல்கள் சில.
நீ மயங்குவதேன்? – கோ.நடேசய்யர் – 1931 –
4. இந்தியத் தொழிலாளர் துயரச் சிந்து – மீனாட்சி அம்மை.- 1931 – சகோதரி அச்சகம்
5. இந்தியத் தொழிலாளர் அந்தரப் பிழைப்பு நாடகம் – கோ.நடேச ஐயர் திருமதி கோ.ந.மீனாட்சியம்மாள். 1937 – கமலா பிரஸ்.
7. இந்தியர்களது இலங்கை வாழ்க்கையின் நிலைமை. மீனாட்சி அம்மையார்.1940 – கணேஸ் பிரஸ்
அதற்குப் பிறகு வீரகேசரி (1930) தினகரன்(1932) என்ற பத்திரிகைகளில் இந்தப் பணிகள் மேற் கொள்ளப்பட்டன.
⦁ 1960 களில் மலையகத் தமிழ் இலக்கியம் புத்தெழுச்சி காணும் வரையில் அதாவது 1920 இல் இருந்து 1960 வரை மக்கள் மனம் தளர்ந்து போகாது அவர்களுக்கு உணர்வு ஊட்டி காத்தவர்கள் சிறு பிரசுரங்களும் அவற்றைப் பாடிக் காட்டிய பாடலாசிரியர்களுமாகும்.
⦁ எஸ் ஆர் எஸ் பெரியாம்பிள்ளை பி.ஆர் பெரியசாமி மா.செ.ஜம்புலிங்கம் போன்றோறது பணி மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
மலையக இலக்கிய பாரம்பரியத்தின் செல்வாக்கு மிகுந்த நாட்டுப்பாடலின் தாக்கத்திற்கு இவர்கள் ஆட்பட்டிருந்தனர். பொது மக்களை இவை பெரிதும் கவர்வதன.
மலையக இலக்கியத்தில் புதிய இரத்தம்.
இதே கால கட்டத்தில் இலங்கை இலக்கிய உலகில் நவீன இலக்கியப் பரிச்சயங்களுடன் இனம் காட்டுவதில் சிவி.வேலுப்பிள்ளை சக்தீ அ. பாலையா கே.கணேஸ் ஆகியோர் முனைப்போடு செயற்பட்டனர்.
ஆங்கில புலமை பெற்ற இவர்கள் தமிழ் மொழியில் மாத்திரமன்றி ஆங்கிலப் பத்திரிகைகளிலும் எழுதினர்.
⦁ எட்டியாந்தோட்டை சென் மேரிஸ் கல்லூரி தமிழ் விழாவில் கலந்து கொண்டு பேசிய மட்டக்களப்பு எஸ்.பொன்னுத்துரை
“1948 ஆம் ஆண்டும் 1956ஆம் ஆண்டும் கொண்டுவரப்பட்ட குடியூரிமைச் சட்டமும் சிங்கள மொழிச் சட்டமும் தான் மலையக இலக்கியத்தை தேசிய இலக்கியமாக உருவாக்க உதவின” என்று குறிப்பிட்டார்.
1960 மலையக இலக்கியத்தின் எழுச்சிக் காலம்
⦁ மலையக இலக்கியத்தில் 1960 ஆம் ஆண்டு காலப்பகுதி குறித்து வெகுவாகப் பேசப்படுவதை காணலாம்.
ஈவேரா மற்றும் திராவிடச் செல்வாக்கு
⦁ ஏனெனில் இந்தக் கால கட்டம் ஈவேரா மற்றும் திராவிடச் செல்வாக்கு மலையகத்தில் வியாபித்திருந்த காலம். அதே வேளையில் இடதுசாரிக் கருத்துக்களால் உள்வாங்கப்பட்டு இடதுசாரி தொழிங்சங்கங்களும் வீரியம் பெற்றிருந்த காலம். மறு வலமாக காந்தி மன்றம் அண்ணா மன்றம் நேரு மன்றம் எம்ஜியார் மன்றம் சிவாஜி மன்றம் என்பன கலை பண்பாட்டு அம்சங்களும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு மோகமும் மேலோங்கி இருந்தது.
⦁ வீரகேசரி தினகரன் ஈழநாடு பத்திரிகைகளுடன் தமிழகத்திலிருந்து தினத்தந்தி தினமணி திராவிடக் கழக ஏடுகளான முத்தாரம் முரசோலி தென்றல் மாலைமணி கல்கி குமுதம் கல்கண்டு ஆனந்தவிகடன் போன்ற பத்திரிகைகளையும் சஞ்சிகைகளையும் பணம் கொடுத்து வாங்கிப் படித்தனர்.
தமிழக செல்வாக்கை தடுத்து நிறுத்தும் இலங்கை அரசு.
⦁ இந்த தமிழக செல்வாக்கை தடுத்து நிறுத்த வேண்டிய தேவை இலங்கை அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கு;ம் இருந்தது. எனவே இலங்கை அரசு குறிப்பாக சிறிமாவோ பண்டாரநாயக்க இந்தியாவில் இருந்து பத்திரிகைகள் புத்தகங்கள் மற்றும் பிரசுரங்களைத் தடை செய்தது. உள்ளுர் இலக்கியங்களை மேம்படுத்துவதற்காகவூம் பிரசுரங்களை ஊக்குவிப்பதற்காகவே இந்திய குறிப்பாக தமிழக பத்திரிகைகளுக்கும் பிரசுரங்களுக்கும் தடை விதிப்பதாக அப்போது கூறப்பட்டது.
இலங்கைஅரசாங்கத்தின் இந்தசெயற்பாடுவரவேற்கத்தக்கதாக இருந்தபோதும் மலையகத்தின் மீது தீவிரமாகப் பரவிய திராவிடச் செல்வாக்கை வேரறுப்பதற்கே இலங்கை அரசினால் இந்தத் தடை கொண்டு வரப்பட்டது.
இதனால் நன்மை விளைந்தது என்பது மறுப்பதற்கில்லை. வீரகேசரி மனேஜராக இருந்த பாலச்சந்திரன் தமிழ் எழுத்தாளர்களைத் தேடிப்பிடித்து கதைகளையூம் நாவல்களையூம் பெற்று வீரகேசரிப் பிரசுரங்களாக வெளியிட்டார்.
வடக்கு கிழக்கு மலையகம்எனப்பலஎழுத்தாளர்களின் இலக்கியங்கள் சிறுகதைகளாகவும் நாவல்களாகவும் அச்சேறி மக்களின் கைகளுக்கு வந்தன. இதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த வீரகேசரி நிறுவனத்தின் விநியோக கட்டமைப்பு பெரிதும் உதவின.
வீரகேசரிப் பிரசுரங்கள் பற்றி பேராசிரியர் நா.சுப்ரமணிய ஐயர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.
நாற்பத்தைந்து நாவல்கள் வீரகேசரி பிரசுரங்களாகவும் பதின்மூன்று நாவல்கள் வீரகேசரியின் துணை வெளியீட்டு நிறுவனமான ஜனமித்திரன் பிரசுரங்களாகவும் அமைகின்றன என்ற உண்மை அண்மைக்காலத்தில் நாவல் வெளியீட்டுத்துறையிலே வீரகேசரி நிறுவனம் வகிக்கும் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைகின்றது. இந்த எண்ணிக்கை அண்மைக்காலம் வரைப் பார்க்கும் போது எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மு.நித்தியானந்தனின் வைகறை வெளியீடு.
மலையகத் தொகுப்பு என்ற ரீதியில் 1971 இல் எஸ்.எம். கார்மேகம் கோவிந்தராஜ் எச்.எச்.விக்ரமசிங்க ஆகியோரின் முயற்சியில் வெளியான மலையகத்தின் முதல் சிறுகதைத் தொகுப்பான “கதைக்கனிகள்”
நூலினை வீரகேசரியின் முதல் பிரசுரமாக நாம் கொள்ளலாம் என மு.நித்தியானந்தன் குறிப்பிடுகின்றார்.
எனினும் முதல் மலையகச் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்ட பெருமை அவர் ஆரம்பித்த வைகறை பிரசுரத்திற்கே உரியதாகும்.
மலையக எழுத்தாளர்களின் சிறு கதைகளின் தொகுப்பாக தெளிவத்தை ஜோசப்பின் “நாமிருக்கும் நாடே” ; என்.எஸ்.எம். இராமையாவின் “ஒரு கூடைக் கொழுந்து” சி.வி.வேலுப்பிள்ளையின் “வீடற்றவன்” என்பன வைகறைப் பிரசுரங்களாக வெளிவந்தன. இதற்குக் காரண கர்த்தாவாக இருந்தவர் மு.நித்தியானந்தன்.
இந்தத் தொகுதிகள் வெளி வர நித்தி சேருடன் அவ்வேளையில் யாழ் பல்கலைக் கழகத்தில் மாணவர்களாக இருந்த பாலசுப்ரமணியம் தேவராஜ் மூக்கையா நடராஜா ஜெயராமன் ஆகியோர் பக்க பலமாக இருந்து பணியாற்றியதை இவ்விடத்தில் நினைவு கூர விரும்புகின்றேன்.
நண்பர் முருகபூபதி இவ்வாறு எழுதுகின்றார்.
“மு.நித்தியானந்தன் இல்லையென்றால் இராமையாவின் ஒரு கூடைக் கொழுந்து (1980 இல் தேசிய சாகித்திய விருது பெற்றது) சிறுகதைத் தொகுப்பை தமிழ் இலக்கிய உலகம் கண்டிருக்காது. நித்தி – தெளிவத்தை ஜோசப்பின் நாமிருக்கும் நாடே – சி..வி.வேலுப்பிள்ளையின் வீடற்றவன் முதலானவற்றையும் தனது வைகறை வெளியீடாகக் கொணர்ந்தார்.
என்.எஸ்.எம் மாத்திரம் அல்ல – அவரைப் போன்ற பல அற்புதமான மலையக இலக்கிய கர்த்தாக்கள் மலையக அரசியல் இயக்கங்களினால் அவற்றின் தலைவர்களினால் கண்டு கொள்ளப்படவில்லை. அவர்கள் கண்டுகொள்ள முயலவுமில்லை” என்று நண்பர் முருகபூபதி இராமையா மறைந்தபோது எழுதிய இரங்கலுரையில் குறிப்பிட்டுள்ளார்.
லண்டனில் நூல் வெளியீடு.
மு.நித்தியானந்தன் அவர்களின் முயற்சியால் வெளிக் கொண்டு வரப்பட்ட மூன்று நூல்கள் எதிர்வரும் (ஏப்ரல்) 20 ஆம் 21 அம் திகதிகளில் லண்டனில் வெளியிடப்பட உள்ளன.
சி.வி.வேலப்பிள்ளையின் “எல்லைப்புறம்” என்ற நாவல் தெளிவத்தை ஜோசப் எழுதிய கதைகளின் தொகுப்பாக “தெளிவத்தை ஜேசப்பின் கதைகள்” என்ற தொகுப்பு நூல் மு.சிவலிங்கத்தின் கதைகள் அடங்கிய “ஒப்பாரிக் கோச்சி” என்ற மூன்று நூல்களே அவைகளாகும்.
சி.வி வேலப்பிள்ளையின் “எல்லைப்புறம”; என்ற நாவல் 1958 இல் எழுதப்பட்டது. இந்த நாவலை அவர் எழுத மூன்று வருடங்கள் பிடித்துள்ளன. டீழுசுனுநுசு டுயுNனு – எல்லைப்புறம். தோட்டப்புற மக்களுக்கும் கிராம மக்களுக்கும் இடையிலான பிரச்சனையை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவலாகும். இது ஏற்கனவே கனடா “தாய் வீடு” வெளியீடாக வெளி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந் நூலுக்கான வெளியீட்டு விழாவினை மல்லியப்பு சந்தி திலகர் கொழும்பில் நடத்தியுள்ளார்.
“தெளிவத்தை ஜேசப்பின் கதைகள்” என்ற தொகுப்பு நூல் தெளிவத்தை ஜோசப் எழுதிய பெரும்பாலான கதைகளை உள்ளடக்கியதாகும். இந்த நூலில் 59 சிறு கதைகள் இடம்பெற்றுள்ளன. 450 பக்கங்களுடன் இந் நூல் வெளியாகியுள்ளது.
தெளிவத்தை ஜோசப் உயிருடன் இருக்கும் பொழுதே இந்த நூலினை வெளிக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மு.நித்தியானந்தன் மீனா நித்தியானந்தன் மற்றும் விக்ரமசிங்க ஆகியோர் முயற்சித்த போதும் நூல் வெளி வருவதற்குள்ளேயே தெளிவத்தை ஜோசப் அவர்களை காலன் கவர்ந்து விட்டான்.
“ஒப்பாரிக் கோச்சி” என்ற நூல் மு.சிவலிங்கம் எழுதிய சிறு கதைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது. இந் நூலில் அவர் எழுதிய 16 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. வைகறை பிரசுரத்திற்கப் பிறகு பல பிரசுரங்கள் மலையக இலக்கியத்தை வளர்த்தெடுத்தன. துரை விஸ்வநாதன் போன்ற பலர் தமது சொந்த பணத்தை முதலிட்டு மலையக எழுத்தாளர்களின் ஆக்கங்களை பிரசுரித்தனர்.
பேராசிரியர் கைலாசபதி
பேராசிரியர் கா.கைலாசபதி அவர்கள் தினகரன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக இருந்த போது மலையக எழுத்தாளர்களை ஊக்குவித்து எழுத வைத்துள்ளார். சி.வி.வேலுப்பிள்ளையின் படைப்புக்கள் பல தினகரனில் பிரசுரமாகின. சி.வி.வேலுப்பிள்ளை அவர்களின் ஆங்கிலக் கவிதைகளை பொன்.கிருஸ்ணசாமி மெழி பெயர்த்து தொடராக தினகரனில் வெளியிட்டார்.
அது மாத்திரமல்ல நாடகத்துறையில் அதிக ஆர்வம் காட்டிய என.எஸ்.எம்.இராமையாவின் நாடகத்தைப் பார்வையிட்ட பின் அவரைச் சந்தித்த கா.கைலாசபதி அவர்கள் சிறுகதைகள எழுதுவதில ;ஆர்வம் காட்டுமாறு கேட்டுக்கொண்டார்.
அதனையடுத்தே இராமையா அவர்கள் சிறுகதைகளை எழுதுவதில் கூடுதல் கவனம் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போன்று சி.வி.வேலுப்பிள்ளை அவர்களை நாவல் எழுதுமாறு கா. கைலாசபதி அவர்கள் ஆலோசனை வழங்கினார். அதனை அடுத்தே சி.வி.வேலுப்பிள்ளை நாவலை எழுதத் தொடங்கினார்.அந்த நாவல்தான் மூன்று வருட உழைப்பில் பிறந்த “எல்லைப்புறம”; நாவலாகும்.
;மலையக இலக்கிய கர்த்தாக்கள்.
நடேசஐயர் பத்திரிகையாளர் அரசியல்வாதி தொழிங்சங்கவாதி. குறிஞ்சித் தென்னவன் ஒரு தொழிலாளி. சாரல்நாடன் ஒரு தேயிலைத் தொழிற்சாலை அதிகாரி. தெளிவத்தை ஜேசப் ஒரு தோட்டப்பாடசாலை ஆசிரியர். பின்னாளில் ளுவயச வழககநந நிறுவனத்தில் அக்கவூண்டனாக பணிபுரிந்தார். சி.வி.வேலுப்பிள்ளை ஒரு கவிஞன் சிறுகதை எழுத்தாளன் அரசியல்வாதி நாடாளுமன்ற உறுப்பினர் பத்திரிகை ஆசிரியர். என்.எஸ்.எம் இராமையா தோட்டத்தில் எக்கவூண்டனாக் பணி புரிந்து பின்னாளில் கொழும்பில் இரும்புக் கடையில் அக்கவுண்டனாகப் பணி புரிந்தவர். மல்லிகை.சி.குமார் கால்நடை மருத்துவமனையில் பணியாற்றியவர்.
அதாவது பெருந்தோட்டத்துறை மலையக சமூகத்தை தெழில் ரீதியாக தொழிலாளியாக ஆசிரியர்களாக தோட்ட உத்தியோகத்தர்களாக அரசியல்வாதிகளாக தொழிற்சங்கவாதிகளாக பத்திரிகை ஆசிரியாகள் என பல்வேறு தோற்றப்பாடுகளை உருவாக்கிய போதும் இவர்கள் அனைவரும் ஒட்டு மொத்த மலையகத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இலக்கிய கர்த்தாக்களாகவே வாழ்ந்தனர். மலையகம் என்ற மூச்சுக் காற்றையே அனைவரும் சுவாசித்தனர் என்பதை மறுப்பதற்கில்லை.
மலையக இலக்கிய கர்த்தாக்களை இரண்டு வகைப்படுத்தலாம்.
1. மலையக மண்ணைச் சார்ந்தவர்கள்.
2. மலையகத்தை வாழ்விடமாகக் கொண்டவர்கள்.
இவர்கள் தொழில் நிமித்தமோ அல்லது வேறு தொடர்புகளாலோ மலையகத்தில் வாழ்ந்து மக்களின் வாழ்வியலை உள்வாங்கி இலக்கியம் படைத்தவர்கள்.
⦁ முதலாவது பிரிவில் சி. வி. வேலுப்பிள்ளை – கோ. மீனாட்சியம்மாள் – கோகிலம் சுப்பையா – என்.எஸ்.எம். இராமையா – தெளிவத்தை ஜோசப் – மாத்தளை சோமு – சாரல்நாடன் – தமிழோவியன் – பதுளை ராகுலன் – மொழிவரதன் – மலரன்பன் – மாத்தளை வடிவேலன் – அஸ_மத் -இப்னு அஸ_மத் – அந்தனி ஜீவா – மல்லிகை சி. குமார் – மரியதாஸ் – எம். முத்துவேல் – சாந்திகுமார் – புசலாவ இஸ்மாலிகா – கேகாலை கைலைநாதன் – லெனின் மதிவானம் – இராகலை பன்னீர் – nஐ. சற்குருநாதன் – திலகா பழனிவேல் – சந்திரலேகா கிங்ஸிலி முதலானோர் உற்பட இன்னும் பலர் இந்த வரிசையில் அடங்குகின்றனர்.
⦁ மலையக மண்ணைச் சாராத யோ. பெனடிக்ற்பாலன் – செ. கணேசலிங்கம் – நந்தி – புலோலியூூர் க. சதாசிவம் – வ.ஐ.ச. ஜெயபாலன் – கே. ஆர். டேவிட் – இதயராசன் – அ.செ.முருகானந்தம் – தி.ஞானசேகரன் என்று பலரை வரிசைப்படுத்தலாம்.
“தூரத்துப் பச்சை” பிறந்த கதை
“தூரத்துப்பச்சை” நாவலின் பிரதியைத் தமிழ்ப் புத்தகாலய கண. முத்தையாவிடம் காட்டினேன். பிரசுரிக்கலாம் என்றார். ஆனால்இ அதிகமாக விற்பனை ஆகாது என்றார். சிதம்பர ரகுநாதன் புத்தகத்தைப் படித்துஇ பிரசுரிக்குமுன் நனவை செய்தார். அந்த சமயத்தில் தோட்டத்தொழிலாளிகள் ஏழைகளாகத் துன்பப்பட்டார்கள். அவர்கள் சரிதையை எழுதவோஇ சிந்திக்கவோ யாரும் நினைக்கவில்லை. சங்கத்தலைவர்கள் அவர்களின் புகழைத்தான் நினைத்தார்கள். தொழிலாளியின் துயரங்களை நினைக்க அவகாசமில்லை. நான் ஒன்றும் மகத்தான சேவை செய்யவில்லை.
ஆனால்இ அவர்களைப் பற்றியும் அவர்கள் எந்த நிலையில் இலங்கை வந்தார்கள் என்பது பற்றியும் உலகம் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதுதான் என் ஆசையாக இருந்தது. நிறைவேற்றினேன்” என்று கோகிலம் சுப்பையா அமெரிக்காவிலிருந்து 15.11. 1995 திகதியிட்டு மு.நித்தியானந்தன் அவர்களுக்கு எழுதிய கடிதமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
வீரகேசரியின் நூல்வெளியீட்டு வரிசையில் 10ஆவது வெளியீடாக ‘தூரத்துப்பச்சை’ 1973 இல் மறுபிரசுரம் பெற்றது என்ற பதிவினையும் நித்தியானந்தன் சேர் குறிப்பிட்டுள்ளார்.
மலையக இலக்கியத்தில் பல பெண் எழத்தாளர்கள் தற்போது பிரவேசித்துள்ளனர்.
சிவபாக்கியம் குமாரவேல்
ஒரு முக்கியமான பெண் ஆளுமை பற்றி இங்கு குறிப்பிட விரும்புகின்றேன். அவர்தான் சிவபாக்கியம் குமாரவேல்
இவர் 1946 இல் “இதய கீதம்” என்ற தலைப்பில் ஒரு கவிதை நூலினை வெளியிட்டுள்ளார். வசனக் கவிதையில் அமைந்துள்ள இந்த கவிதைகள் தாகூரின் கீதாஞ்சலியின் தாக்கத்தைக் கொண்டதாக அமைந்துள்ளது என இலக்கிய விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். மலையக வசனக் கவிதை நடை பாரம்பரியத்தின் முன்னோடியாக சிவபாக்கியம் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில் 1970 களில் சிவானந்தன் அவர்களின் “வண்ணச் சிறகு கதைகள்” என்ற வசன கவிதை நூல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை இந்திய ஒப்பந்தங்களால் தமிழகம் திரும்பி மசின குடியில் வாழ்ந்தவர் சிவானந்தன்.
இந்த நூல் மல்லிகைப்பூசந்தி திலகர் அவர்களினால் மறுபிரசுரம் செய்யப்பட்டள்ளது.”
முற்றும்