தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்படுபவர் நயன்தாரா. சமீபத்தில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் திரைப்படத்தில் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார். இதுவே அவர் நடித்த முதல் இந்தி திரைப்படமாகும். படம் 1500 கோடி ரூபாய் வசூலை குவித்து சாதனை படைத்தது. அதற்கு முன் நயன்தாரா நடித்த படம் ‘அன்னபூரணி’. இது நயன்தாராவின் 75-வது படமாகும். இதனை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கினர். நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்தார். இப்படம் கடந்த வருடம் டிசம்பர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இது நாயகியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். நயன்தாரா ஃபீமேல் செண்டிரிக்காக நடித்த பல படங்களில் வலுவான பெண் கதாபாத்திரங்களில் நடித்து வெற்றியை பெற்றவர். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பேசிய பொழுது “சமூக இழிவுகளை மீறும் அதிகாரம் பெற்ற பெண்களின் கதாப்பாத்திரத்தில் நடிப்பது ஒரு ஆக்கப்பூர்வமான தேர்வு மட்டுமல்ல அவர்களின் குரல்களின் ஒரு பிரதிபலிப்பாகவும், அவர்களுக்கான குரலாகவும் இருக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்”. என கூறினார்.