அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப், தன்னுடனான பாலியல் உறவுகளை மூடி மறைக்க ஆபாச நடிகை ஸ்டார்மி டேனியல்சுக்கு ரூ.1 கோடி கொடுத்தது தொடர்பாக அவருக்கு எதிராக நீதிமன்ற விசாரணை நடந்து வருகிறது. இந்த சூழலில் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது என டிரம்புக்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அவர் அதை மீறி வழக்கில் தொடர்புடையவர்களை பொதுவெளியில் தொடர்ந்து விமர்சித்து வந்தார். இதைத்தொடர்ந்து நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி டிரம்ப் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி அவருக்கு 9 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.7.5 லட்சம்) அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
![நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் டிரம்புக்கு ரூ.7 லட்சம் அபராதம்](https://uthayannews.ca/wp-content/uploads/2024/04/Isral-Eran-Trump-warning.jpg)