ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ புதிய படத்தை இயக்குநர் ஞானவேல்ராஜா இயக்கி வருகிறார். இதில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். லைகா புரொடக்சன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் ‘வேட்டையன்’ படத்தில் ரஜினிகாந்த்தின் அறிமுக பாடல் (இன்ட்ரோ பாடல்) மீண்டும் கொண்டுவர படக்குழு திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான படப்பிடிப்பு வருகிற 25 -ந்தேதி சென்னை சுந்தர் ஸ்டுடியோவில் நடைபெறவுள்ளது. இதற்காக அங்கு பிரமாண்டமான ‘செட்’ போடப்பட்டு உள்ளது. மேலும் இந்த பாடலுக்கு பிரபல நடன அமைப்பாளர் தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணிபுரிய உள்ளார். இதில் ரஜினியின் அறிமுக பாடலை அவர் பிரமாண்டமாக உருவாக்க உள்ளார். இதில் ரஜினியுடன் ஏராளமான நடன கலைஞர்கள் பங்கேற்று நடனமாடுகிறார்கள். இந்த பாடல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த ‘அண்ணாமலை’ ‘பாட்ஷா’ படத்தில் வரும் அறிமுக பாடல் போன்று பிரமாண்டமாக தயார் செய்யும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும் இந்த ஆண்டின் இறுதியில் ‘வேட்டையன்’ படம் திரையரங்குகளில் வெளியீடு செய்யவும் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்நிலையில் வேட்டையன் படத்தின் இன்ட்ரோ பாடலில் ரஜினிகாந்துடன் இணைந்து இசையமைப்பாளர் அனிருத் இணைந்து நடமாடியுள்ளார்.