நாட்டை கட்டியெழுப்பும் தீர்வுக்கு மக்கள் சக்தி ஓரணியில் திரள்வோம் என்ற கோஷத்துடன் தேசிய மக்கள் சக்தியின் மேதின கூட்டம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரம் தலைமையில் யாழ்ப்பாண மத்திய கல்லூரியில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இன்று காலை 10 மணிக்கு கூட்டம் ஆரம்பமானது.
நாட்டை கட்டியெழுப்பும் தீர்வுக்கு மக்கள் சக்தி ஓரணியில் திரண்டு, இன மத சாதி பேதமின்றி புதிய சுதந்திர போராட்டத்திற்காக போராடுவோம் என்ற கோஷத்தை முன்வைத்து உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்காக, நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் உரிமைகள் சம்பந்தப்பட்ட அனைத்து உரிமைகளையும் வென்றெடுக்க தேசிய மக்கள் சக்தி தொழிலாளர் தினத்தில் அறை கூவல் விடுத்துள்ளது.
மேதின கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் உரிமைகளுக்கான பெண்கள் அமைப்பின் தலைவி சரோஜா சாவித்திரி குகராஜ், இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் பிரகாஷ் உள்ளிட்ட பல உறுப்பினர்கள் மற்றும் பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.