நடிகர் ஜெயராமின் மகள் மாளவிகா திருமணம் எளிமையாக குருவாயூரில் நடந்து முடிந்திருக்கிறது. ஜெயராமின் மகள் மாளவிகாவுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நவ்னீத் கிரீஷ் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பாலக்காட்டைச் சேர்ந்த நவ்னீத் லண்டனில் சாட்டர்ட் அக்கவுன்டன்ட்டாக பணிபுரிகிறார். இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் முடித்துள்ளனர். குருவாயூரில் எளிமையாக நடந்த இந்தத் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.