பிரபுதேவா தற்பொழுது மீண்டும் பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டு இருக்கும் ‘கோட்’ படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து பிரபுதேவா இன்னும் தலைப்பிடப்படாத ஏ.ஆர்.ஆர்.பி.டி 6 என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான மனோஜ் என்.எஸ் இயக்கவுள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை பிஹைண்ட்வுட்ஸ் தயாரிக்கவுள்ளது. பிரபுதேவா நடிக்கும் படத்திற்கு 6 வது முறை ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தில் பிரபுதேவாவுடன், யோகி பாபு, அஜு வர்கீஸ், மொட்டை ராஜேந்திரன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. அதனை ஏ.ஆர் ரகுமான் அவரது எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் – பிரபுதேவா கூட்டணியில் வெளியான அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், கடைசியாக மின்சார கனவு படத்தில் இணைந்திருந்தனர். அதன்பிறகு 25 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இந்த படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
![ஏ ஆர் ரகுமான் இசையில் பிரபுதேவா நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்](https://uthayannews.ca/wp-content/uploads/2024/05/Ar-Rahman-prabu-deva-pada-shooting.jpg)