புதுச்சேரியில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘வேட்டையன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றது.
‘ஜெயிலர்’ திரைப்படத்தைத் தொடர்ந்து, ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இத்திரைப்படத்தை த.செ.ஞானவேல் இயக்குகிறார். அமிதாப் பச்சன், துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும், இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘வேட்டையன்’ படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இந்நிலையில், படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், புதுச்சேரியில் படத்தின் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரி பழைய துறைமுகம் பகுதியில் 7 நாட்கள் இந்த படப்பிடிப்பு நடைபெறுகிறது. 4 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், வெளிநாட்டவருடன் ரஜினிகாந்த் சண்டையிடுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.