கடந்த 2005-ம் ஆண்டில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான படம் அந்நியன். இதில் பிரபல நடிகர் விக்ரம், சதா, விவேக், பிரகாஷ் ராஜ் நடித்தனர். இப்படம் நகைச்சுவை, காதல், அதிரடி த்ரில்லர் படமாக இருந்ததால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வசூலை குவித்தது. இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஆஸ்கார் சார்பில் தயாரிப்பாளர் வி. ரவிச்சந்திரன் தயாரித்து இருந்தார். இப்படத்துக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்தார். இந்நிலையில் தற்போது விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் படங்கள் ‘மறு வெளியீடு செய்யப்படுகின்றன. இதே போன்று விக்ரம் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக ‘அபராஜிதடு’ (அந்நியன்) என்ற பெயரில் இப்படம் வருகிற மே 17- ந்தேதி தெலுங்கில் மறு வெளியீடு’ செய்யப்பட இருக்கிறது. இப்படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பாளரான ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் தெலுங்கில் இதனை ‘மறு வெளியீடு செய்கிறார்.