நடராசா லோகதயாளன்
மன்னார் மாவட்டத்தில் ஆண்டுதோறும் 10 மீற்றருக்கும் அதிக பிரதேசம் கடல் அரிப்பினால் அள்ளுண்டு செல்வதனால் பெரும் ஆபத்தை எதிர்கொளவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக தற்போது மன்னார் மாவட்டத்தில் உள்ள கடற்படையினரின் காவலரன் ஒன்று கடல் அரிப்பின் காரணமாக கடலில் அடித்துச் செல்லப்பட்டது.
மன்னார் மாவட்டத்தின் முசலி பிரதேச செயலாளர் பிரிவில உள்ள சிலாவத்துறை கொண்டச்சிக்குடாவில் அமைந்திருந்த கடற்படை காவலரனே இவ்வாறு கடல் அரிப்பின் காரணமாக கடலில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.
கடலில் இருந்து சுமார் 10 மீற்றர் தூரத்தில் அமைந்திருந்த காவலரனும் அதன் அருகே இருந்த தனியார் இறங்குதுறை ஆகிய பகுதிகளிலேயே நேற்று முன் தினம் இவ்வாறு கடல் அரிப்பு ஏறபட்டுள்ளது.
இப் பிரதேசத்துல் ஆண்டு ஒன்றிற்கு 10 மீற்றருக்கும் அதிக பிரதேசம் என்ற வகையில் கடல் அரிப்பிற்கு இலக்காகி வருவதனால் கடற்றொழிலாளர்கள், அயல் கிராம மக்கள் ஆகியோர் பெரிதும் பாதிப்பினை எதிர்கொண்டு வருகின்றனர்.
இவ்வாறு தொடரும் கடல் அரிப்பின் காரணமாக ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் அதனைத் தடுக்கும் வழி வகைகளுடன் மாவட்ட வரைபடத்தில் மாற்றம் ஏறபடுகின்றதா எனபது தொடர்பில் ஆராய உரிய திணைக்களங்கள் ஊடாக நடவடிக்கை இடம்பெறுகின்றதாக மாவட்ட அரச அதிபர் தெரிவித்தார்.