கனடா நாட்டிலே அதிவேக வளர்ச்சியில் முன்னணியில் திகழும் பிரம்ரன் மாநகரத்தின் (City of Brampton) ஐம்பதாவது பிறந்தநாளையொட்டி (Brampton 50th Birthday Celebration) நகரத்தின் சிறந்த சாதனையாளர்களையும் மற்றும் தொண்டர் சேவையில் அளப்பெரிய பங்காற்றிய சிறந்த பிரஜைகளையும் அடையாளம் கண்டு சிறப்பு விருது வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் மே மாதம் ஒன்பதாம் திகதி (May 9, 2024) அன்று பிரம்ரன் மாநகரத்தின் மையத்தில் அமைந்துள்ள றோஸ் தியேட்டரில் ஆயிரக்கணக்கான விருந்தினர்கள், பார்வையாளர்கள் மத்தியில் இடம்பெற்ற நிகழ்வில் நமது கிழக்கின் மைந்தனும், உதவும் பொற் கரங்களின் தலைவரும் சமூக சேவையாளருமாகிய விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்களுக்கு ஒரே நாளில் ஒரே மேடையில் அதி உயர்ந்த விருதுகளான “பிரம்ரன் ஐப்பதாவது பிறந்தநாள் சிறந்த குடியுரிமைக்கான விருது” “Best Citizen Brampton 50th Birthday Celebration Award” மற்றும் முப்பத்தைந்து வருட நீண்டகால சேவைக்கான தொண்டர் விருது (35 Years Long Services Volunteer Award” ஆகிய இரண்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டமை கனடாவில் மட்டுமன்றி உலகலாவியரீதியில் வாழும் ஈழத்தமிழர்கள் மத்தியில் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
கனேடிய அரசாங்கத்தில் உயர் பதவியில் நீண்டகாலமாக பணியாற்றிவருபவரும் இலங்கேஸ் தருமலிங்கம் அவர்களின் பரிந்துரையின் பிரகாரம் இவ் உயரிய இரு விருதுகள் விஸ்வலிங்கம் கணபதிப்பிள்ளை அவர்களுக்கு கிடைத்தமை மிகப்பெரிய சாதனையாகும்.
இத்தருணத்தில் விஸ்வலிங்கம் அவர்களின் அளப்பெரிய சமூகத்தொண்டினையும் நீண்டகால தொண்டர் சேவையினையும் அங்கீகரித்து இவ் உயரிய இரண்டு விருதுகள் பிரம்ரன் மாநகரத்தால் வழங்கி கௌரவிக்கப்பட்டமை ஈழத்தமிழர்களிற்கு கிடைத்த கௌரவம் என்றே கருதவேண்டும்