– ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆராய்ந்து நியாயமான தீர்வு வழங்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
பு.கஜிந்தன்
காரைக்கால் திண்ம கழிவு சேகரிக்கும் நிலைய விவகாரம் – ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஆராய்ந்து நியாயமான தீர்வு வழங்கப்படும் என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
மக்களின் சுகாதார நலன்களை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் காரைக்கால் திண்ம கழிவு சேகரிக்கும் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிலமைகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகளின் பிரசன்னத்துடன் ஆராய்ந்தநிற்துகொண்டார்.
இணுவில் காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை சேகரிக்கும் நிலையத்தில், கடந்த திங்கட்கிழமை இரவு திடீரென சேகரித்து வைக்கப்பட்டிருந்த கழிவுகள் தீ பிடித்து எரிந்துள்ளன.
இதன்காரணமாக குறித்த திண்ம கழிவுகளை சேகரிக்கும் நிலையத்தினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் அதனால், அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டு அதற்கான தீர்வை பெற்றுத்தருமாறு கோரி யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் அமைச்சருமான டக்’ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டவரப்பட்டது.
கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து இன்றையதினம் (11.05.2024) குறித்த பகுதிக்கு நேரடி கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அதிகாரிகளின் பிரசன்னத்துடன் நிலமைகளை ஆராய்ந்துள்ளதுடன் அது குறித்து நடைபெறவுள்ள மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குறித்த பிரச்சினை கவனத்தில் எடுக்கப்பட்டு நியாயமான தீர்வு காணப்படும் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது