கனடா ‘கனடிய பல்லின பத்திரிகையாளர்கள் கழகம்’ ‘சர்வதேச பத்திரிகைச் சுதந்திர நாளை’ கொண்டாடி மகிழ்ந்தது.
National Ethnic Press and Media Council of Canada celebrates International Press Freedom Day, at the Members Lounge of Council Chambers of Toronto City Hall.
10-05-2024 அன்று வெள்ளிக்கிழமையன்று கனடாவில் இயங்கிவரும் ‘கனடிய பல்லின பத்திரிகையாளர்கள் கழகம்’ (National Ethnic Press and Media Council of Canada) தனது அங்கத்தவர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஆகியோர் சகிதம் ‘சர்வதேச பத்திரிகைச் சுதந்திர நாளை’ கொண்டாடி மகிழ்ந்தது.
மேற்படி விழா ரொறன்ரோ மாநகரில் அமைந்து மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
National Ethnic Press and Media Council of Canada என்னும் பத்திரிகையாளர்கள் கழகத்தின் தலைவர் தோமஸ் சாரஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த பத்திரிகையாளர்கள் விழாவில் கனடா உதயன் சார்பிலும் அதன் பிரதம ஆசிரியர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை வழங்கினார்கள். உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அவர்கள் மேற்படி National Ethnic Press and Media Council of Canada பத்திரிகையாளர்கள் அமைப்பின் நீண்ட கால உறுப்பினர் என்பதும் அதன் சிரேஸ்ட உப- தலைவர்களில் ஒருவர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.