உரும்பிராய் மேற்கு இளைஞர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல் நிகழ்வு இடம் பெற்றது.
யாழ்ப்பாணம் உரும்பிராய் மேற்கு இளைஞர்களால், தியாகி பொன். சிவகுமாரன் அவர்களது சிலை முன்பாக முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை வாரத்தின் மூன்றாவது நாளான இன்று முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
இதில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி மக்கள் பேரியக்க ஒருங்கிணைப்பாளரும் சிவகுரு ஆதீன முதல்வருமான வேலன் சுவாமிகள் மற்றும் உரும்பிராய் மேற்கு இளைஞர்கள் கிராம மக்கள் பயணிகள் என பலரும் கலந்துகொண்டனர்