யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சமூகத்தினால், 2009 ஆண்டு இலங்கை படைத் தரப்புக்களால் முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட தமிழினப் படுகொலையை நினைவு கூரும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு 14.05.2024 அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட நுழைவாயிலில் வழங்கி வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில், இறுதிக்கட்டப் போரின் போது தமிழ் மக்களின் உயிர்காத்த உணவான முள்ளிவாய்க்கால் கஞ்சி விரிவுரை யாளர்கள், ஊழியர்கள், மாணவர்களினால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.